புதன், 6 ஜனவரி, 2016

ஒபாமா அதிரடி..இனி யாரும் சுலபமாக துப்பாக்கி வைத்திருக்க முடியாது

அமெரிக்காவில் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு மக்களுக்கு இருந்துவரும்
உரிமையை கட்டுப்படுத்துவது தொடர்பான அதிபர் ஒபாமாவின் திட்டங்கள் பற்றி அவரது அலுவலகமான வெள்ளை மாளிகை விவரம் வெளியிட்டுள்ளது. துப்பாக்கி விற்பவர்கள் அனைவரும் அதற்காக தங்களைப் பதிவுசெய்துகொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றும், துப்பாக்கி வாங்க வருபவர்களைப் பற்றி பரிசோதனைகள் செய்த பிறகு தான் அவர்களிடம் விற்க வேண்டும் என்றும் புதிய விதிகள் கொண்டுவரப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கை செயல்பாட்டுக்கு வந்தால், பல உயிர்கள் காப்பாற்றப்படும் என்றும் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கான விதிகளைக் கடுமையாக்குவதற்கு பல ஆண்டுகளாக அமெரிக்க காங்கிரஸ் மன்றம் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், தற்போதைய புதிய விதிகள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபரின் உத்தரவாக கொண்டுவரப்படுகின்றன.
அளவு மீறுகிற விதமாக அதிபர் ஒபாமா தனது அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார் என்று விமர்சகர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். bbc.tamil.com

கருத்துகள் இல்லை: