திங்கள், 4 ஜனவரி, 2016

தினமணி : திமுக முன்னிலை- லயோ மாணவர்கள் கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக முன்னிலை பெறும் என லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் “பண்பாடு மக்கள் தொடர்பகம்” வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்பாடு மக்கள் தொடர்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் சி.திருநாவுக்கரசு சென்னையில் செய்தியாளர்களிடம் கருத்துகணிப்புகளை வெளியிட்டார். அப்பொழுது அவர் “ தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் கிராமம், நகரம் என களப்பணியில் ஈடுபட்டு, மொத்தம் 5176 பேரிடம் இந்த கருத்துகணிப்பு நடத்தப்பட்டது.    இந்த மாதிரி செய்திகள் தினமணி குழுமத்திடம் இருந்து வருவது சில சந்தேகங்களை தோற்றுவிக்கிறது,  திமுக நிச்சயம் வெற்றியை நோக்கி செல்கிறது என்பதை திமுகவின் எதிரிகளே அறிவார்கள்...செம்பரபாக்கம் மட்டும் காரணம் அல்ல . எப்படியும் பூனைகுட்டி வெளியே வரும்தானே

அதில், 'தமிழகத்தில் பிரச்னைகளை தீர்க்கும் திறமையான கட்சியாக எந்த கட்சி வரும் தேர்தலில் ஆட்சிக்கு வரவேண்டும்?' என்ற மக்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு,  திமுக-விற்கு 33.9 சதவீத மக்களு,  அதிமுக-விற்கு 31.5 சதவீத மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மதிமுக-விற்கு 8.சதவீதமும், தேமுதிக-விற்கு 14.4 சதவீத மக்களும், பாமக-விற்கு 9.9 சதவீத மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதே போல் கடந்த நான்கு ஆண்டுகளில் அதிமு க அரசின் ஒட்டுமொத்த செயல்பாடு குறித்த கேள்விக்கு “நன்று என 32.5 சதவீத மக்களும், சொல்வதற்கு ஏதும் இல்லை என 25.8 சதவீத மக்களும், மோசம் என 39.3 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். நான்கு ஆண்டுகால அதிமுக ஆட்சி மோசம் என்றே பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழகத்தில் அதிமுக - திமுகவிற்கு மாற்றாக பிற கட்சிகளுக்கு ஆட்சியமைக்கும் திறமை கிடையாது என்று பெரும்பாலனவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேபோல் 18 வயது முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்களில் 15 சதவீதம் பேர் திமுக, அதிமுக தவிர்த்து தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் ஆகிய 3 மதத்தினரிடமும் திமுகதான் செல்வாக்குடன் திகழ்வதாக கருத்துகணிப்பில் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை: