திங்கள், 4 ஜனவரி, 2016

6.7 ரிக்டர் நிலநடுக்கம்.. வடகிழக்கு மாநிலங்களில்...தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைவு

கொல்கத்தா: வடகிழக்கு மாநிலங்களில் 6.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட கடும் நில நடுக்கம் காரணமாக இன்று அதிகாலையில் அம்மாநில மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இந்திய-மியான்மர் எல்லையை மையம் கொண்டு, இன்று அதிகாலை 4.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், அசாம், மேகாலயா, மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களும் குலுங்கின. குறிப்பாக மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் இம்பாலில் பாதிப்பு கடுமையாக இருந்துள்ளது. முதல்கட்ட தகவல்படி அந்த நகரில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், நான்கு பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. Earthquake hit north east states மேலும், மேற்கு வங்கத்திலும் நிலநடுக்க பாதிப்பு உணரப்படதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு நடவடிக்கைகளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மேற்பார்வையிட உத்தரவிட்டுள்ளதாகவும், பிரதமர் நரேந்திரமோடி டிவிட் செய்துள்ளார். மேலும், அசாம் முதல்வர் தருண் கோகாய், அருணாச்சல் பிரதேச முதல்வர் நபம் துகி போன்றோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, நிலைமை குறித்து கேட்டறிந்ததாகவும், பிரதமர் தனது டிவிட்டுகளில் கூறியுள்ளார்.
//tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: