வெள்ளி, 8 ஜனவரி, 2016

புத்தொளி என்கின்ற நாஞ்சில் சம்பத்தின் இன்றைய சிட்டுவேசன் ரிப்போர்ட்

அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பிலிருந்து நாஞ்சில் சம்பத் நீக்கப்பட்ட நாளில், அவரது சொந்த ஊரான கன்னியா குமரி மாவட்டம்,  மணக்காவிளையில் ""இன்னைக்குத்தான் எங்களுக்கு தீபாவளி..'' என்று பட்டாசு வெடித்துக் கொண்டாடினார் கள் மறுமலர்ச்சி தி.மு.க.வினர்.  நாஞ்சில் சம்பத் பற்றி கேட்டதும் நறநறவென்று  அடுக்கினார்கள்""அவரோட ஒரிஜினல் பேரு புத்தொளி. ஏழ்மை நிலையில் கோயில்களில் சொற்பொழிவாற்றியவரை 1986-ல் பரிதிஇளம் வழுதிதான் தி.மு.க.வில் சேர்த்தார். நாஞ்சில் சம்பத் ஆக்கியவரும் அவர்தான். அப்புறம், வைகோவோடு பயணம். அங்கிருந்து அ.தி.மு.க.'' என்றார்கள் தொடர்ந்து...""இந்த ஊரு பெரிய மனுஷங்க சிலர்... போன மாசம் சம்பத் வீட்டுக்கே போயி "மணலிக்கரைக்கு போற ரோடு குண்டும் குழி யுமா கிடக்கு. முதலமைச்சர்கிட்ட அடிக்கடி தொடர் புல இருக்கிற நீங்க சொன்னா கண்டிப்பா நல்ல ரோடு கிடைக்கும்'’ என்றிருக்கிறார்கள்.
அவர்களிடம் சம்பத் “"நான் என்ன மக்கள் பிரதி நிதியா? இல் லைன்னா இளிச்சவாயனா? நீங்க ஓட்டு போட்ட பத்மநாபபுரம் தி.மு.க. எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பன்கிட்ட போயி கேளுங்கய்யா... ஏன் உயிரை வாங்குறீங்க?' என்று  முகத்துக்கு நேராக எரிந்து விழுந்திருக்கிறார். எங்க கட்சியும் (ம.தி.மு.க.) சம்பத்துக்கு இனோவா கார் வாங்கி கொடுத்துச்சு. வீடு கட்டியும் கொடுத்துச்சு.  இவரு அ.தி.மு.க.வுக்கு போயி ஜெய லலிதாகிட்ட இனோவா கார் வாங்கினதும் "இனிமேல் ம.தி. மு.க. கொடுத்த காரில் நான் ஏறவே மாட்டேன்'னு வீர வசனம் பேசிட்டு, மனைவி சசிகலாவிடம் அந்த காரை கொடுத்துட்டாரு. வீட்டு உபயோகத்துக்கு ம.தி.மு.க. கொடுத்த காரைத்தான் இப்ப வரைக்கும் பயன்படுத்திக்கிட்டி ருக்காரு. எங்களோட கேள்வி என்னன்னா... ம.தி.மு.க. கார்ல ஏறமாட் டேன்னு சொன்ன நீங்க, ம.தி.மு.க. கட்டிக் கொடுத்த வீட்டுல இருக்கலாமா? அ.தி.மு.க.வையே இவர்தான் தாங்குற மாதிரி பேசினாரு.இப்ப பொறுப்பை பிடுங்கிட்டாங்கள்ல. கட்சிக்காரன் ஒருத்தன்கூட இவரை வந்து பார்க்கல... ஆறுதலா பேசல. எங்களுக்குத் தெரிஞ்சு... எங்க கட்சில இருந்து  இவரோடு  அ.தி.மு.க.வுக்கு போன லட்சுமணன், ஜெயகோபால், உதயகுமார் இந்த மூணு பேரு மட்டும்தான் இப்ப  தமிழ்நாட்டுல சம்பத்கூட தொடர்புல இருக்கிற  கட்சிக் காரங்க.கட்சித் தலைமையை மதிக்கிற பண்போ, தலைமை மனசுபடி நடக்கிறதோ... சம்பத் அகராதில இல்லவே இல்ல. எங்க கட்சியில இருக்கும்போது ஒவ்வொரு மாவட்டத்துலயும் மாவட்ட செயலாளர் இவருக்கு ஒத்து வரலைன்னா... அவருக்கு எதிரா இருக்கிற கட்சிக்காரங்களை தூண்டிவிட்டு கூட் டம் போடச் சொல்லுவாரு. அந்த மேடையில் மாவட்டச் செயலாளரை பக்கத்துல வச்சிக்கிட்டே... அவ ரோட எதிரியை ஆஹா ஓஹோன்னு தூக்கி வச்சு பேசு வாரு. பேசினதுக்கு லம்ப்பான பலன் இருக்கும். கஷ் டத்துல இருக் கேன்னு சொல்லி தெரிஞ்சவங்க கிட்ட ரூ.1 லட்         சம், ரூ.2 லட்சம்னு வாங்குவாரு.கட்சிக்காரங்க முன்னிலையில் தலைமையைக் கூசாம விமர்சனம் பண்ணுவாரு. ஒருவாட்டி எங்க தலைவர் (வைகோ) "தனித்து போட்டியிடுவோம்'னு அறிவிச்சிட் டாரு.  உடனே சம்பத்,  "சுடுகாட்டுல கட்சிய ஆரம்பிச்சவராச்சே... கட்சியை குழி தோண்டி புதைக்காம விடமாட்டாரு... உருப்படற மாதிரி ஏதாச்சும் சொல்லி வைங்கய்யா'ன்னு தனக்கு வேண்டியவங்ககிட்ட நக்கலா பேசிட்டாரு.  இது தெரிஞ்சதும், தலைவர் ரொம்பவே நொந்துட் டாரு.  "ஆதாயத்தை நாடுபவர்கள்... பணத்தாசை கொண்டவர்கள் கட்சிக்குத் துரோகம் செய்தால் காணாமல் போய்விடுவார்கள்'ன்னு எங்க கட்சி மேடையில் பேசிய சம்பத், இப்ப அ.தி.மு.க. பக்கம் போயி மூணு நாலு வருஷம்தான் ஆகுது. குமாரபுரத்துல 75 லட்ச ரூபாய்க்கு 30 சென்ட் நிலம் வாங்கிட்டாரு. சம்பத் பேரைச் சொல்லி அவரோட டிரைவர் கவர்மென்ட் வேலை வாங்கித் தர்றேன்னு ரொம்ப பேர்கிட்ட பணம் வாங்கிருக்காரு'' என்றார்கள் குமுறலாக. ம.தி.மு.க.வினர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் பெற, நாஞ்சில் சம்பத்தை தொடர்ந்து தொடர்பு கொண்டோம். அவரோ,  தனது செல்போனை  ‘ஸ்விட்ச்-ஆப்’ செய்து விட்டார். மேடைகளில் பல தலைவர்களையும் ஏகவசனத்தில் கடுமையாக விமர்சித்தவர் நாஞ்சில் சம்பத். இப்போது அவர்மீதே விமர்சனக் கணைகள் பாய்ந்த வண்ணம் இருக்கின்றன. 

-சி.என்.இராமகிருஷ்ணன், மணிகண்டன்   nakkheeran.in

கருத்துகள் இல்லை: