

அமைச்சு பதவி எடுக்கும்போது அம்மைவின் ஜெயில்வாசத்தை எண்ணி கேவி கேவி அழுதாங்களே ஒரு டிப்பிக்கல் அம்மா அடிமை அவன்தாய்ன் இந்த லஞ்ச கேப்மாரி
என்ன நடந்தது?
“அவரு மினிஸ்டரோட ஊருக்காரர்தாங்க, வந்ததுமே ஏதோ சைகையிலேயே மினிஸ்டரைப் பார்த்து, 'இது நியாயமா?' ங்கற மாதிரி கேட்டாரு. அதுக்குள்ளே அங்கிருந்தவங்க, 'எதுவாக இருந்தாலும் ஊரில் வந்து பேசிக்கங்க' என்று அவரிடம் சொல்லிக் கொண்டே அவரை அங்கிருந்து வெளியே தள்ளிக் கொண்டு போனார்கள். அதற்குள் அவர் மறைத்து வைத்திருந்த விஷத்தை பாட்டிலில் இருந்து அப்படியே குடித்து விட்டார். உடனே போலீசுக்குத் தகவல் கொடுத்து அவரை காப்பாற்றி அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கொண்டு போய் விட்டார்கள்...” என்கின்றனர், சம்பவத்தைப் நேரில் பார்த்த கட்சிக்காரர்கள் சிலர்.
சிக்கிய கடிதம்
மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு போகும் வழியில், சண்முகம் சட்டைப்பையில் இருந்த ஒரு கடிதமே நான்கைந்து ஜெராக்ஸ் காப்பிகளாக கீழே விழுந்திருக்கிறது. அதில் கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறார், சண்முகம்.
“மாண்புமிகு அம்மா அவர்களுக்கு, கழகம் தொடங்கிய 1972- முதல், நான் கட்சியில் இருக்கிறேன். தற்போது கட்சியில் வடக்கு மாவட்ட பிரதிநிதியாக இருக்கிறேன். என்னுடைய மகளுக்கு 'சமையலர் ' பணிக்கான இன்டர்வியூ வந்துள்ளது என்பதால், அதற்கு சிபாரிசு செய்யும்படி மந்திரி முக்கூர் சுப்பிரமணியத்திடம் கேட்டேன். மந்திரியோ ஒன்றியச் செயலாளர் பி.ஆர்.ஜி. சேகரையும், அவைத் தலைவர் நரசிம்மனையும் பார்க்கச் சொன்னார், நானும் பார்த்தேன்.
இது பற்றி அம்மா அவர்களுக்கு கடந்த 3.1.2016 அன்று ஒரு கடிதம் கொடுத்தேன், இப்போது மீண்டும் கொடுக்கிறேன். இதில் குறிப்பிட்டுள்ள அனைவர் மீதும் அம்மா நடவடிக்கை எடுக்க வேண்டும்...”- இப்படி போகிறது அந்தக் கடிதம்.
ஆனால், அந்தக் கடிதத்தில் தேதி ஏதும் குறிப்பிடப்படவில்லை. மந்திரியின் மீதே குற்றச்சாட்டு என்பதால் இது குறித்த விசாரணையில் போலீசார் தீவிரமாக இறங்கி, மந்திரியின் ஸ்டேட்மெண்ட்டையும் வாங்கி, அதை கார்டனுக்கு அனுப்பி விட்டதாக சொல்லப்படுகிறது.
அதில், "சம்மந்தப்பட்ட ஏ.இ.சண்முகம், கட்சிக்காரர் என்ற அளவில் மட்டும்தான் எனக்குத் தெரியும். இந்த பண விவகாரம் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது" என்று ஆணித்தரமாக மறுத்து விட்டாராம் அமைச்சர்.
கோட்டை வட்டாரத்திலோ, "முக்கூருக்கும் 'அக்ரி' க்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம்தான். இது அவருடைய வேலையாகவும் இருக்கலாம்... மந்திரியின் (முக்கூர் சுப்பிரமணியன்) டீமில் அந்த ஏ.இ.வெங்கடேசன் இருக்க வாய்ப்பு இல்லை. இல்லையென்றால் அவர் வேலைக்கு பணம் கொடுத்து விட்டு ஏமாறத் தேவையில்லையே..." என்கின்றனர்.
பொழுது விடிந்தால் மொத்தக் கதையும் தெரிந்து விடப் போகிறது. சிகிச்சையிலிருந்த ஏ.இ.வெங்கடேசனும் கண் விழித்து விட்டா
ந.பா.சேதுராமன் விகடன்,com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக