சனி, 9 ஜனவரி, 2016

சவுதி- இரான் யுத்தம் /பதற்றம்: வளைகுடா நாடுகள் ரியாத்தில் கூடுகின்றன

சவுதி அரேபியாவுக்கும் இரானுக்கும் இடையே தீவிரமடைந்துள்ள
பதற்றமான சூழல் தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக வளைகுடா கூட்டுறவு பேரவையைச் சேர்ந்த 6 நாடுகளும் சவுதி தலைநகர் ரியாத்தில் கூடுகின்றன. ஒரு வாரத்துக்கு முன்னர் முன்னணி ஷியா மதகுரு ஒருவருக்கு சவுதி மரண தண்டனை நிறைவேற்றியதைத் தொடர்ந்தே, சுன்னி ஆதிக்க நாடான சவுதிக்கும் அதன் பகைநாடான ஷியா ஆதிக்கம் கொண்ட இரானுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன. இரானுடன் இராஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்ட சவுதியின் நடவடிக்கையை வளைகுடா ஒத்துழைப்பு பேரவையின் இன்னொரு உறுப்பு நாடு மட்டுமே பின்பற்றியுள்ளது.
மற்ற நாடுகளும் இந்த வழியைப் பின்வற்ற வேண்டும் என்று இன்றைய கூட்டத்தில் சவுதி அரேபியா வற்புறுத்தும் என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறினார். நேற்று வெள்ளியன்று, ஐநாவின் தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பிய இரானின் வெளியுறவு அமைச்சர் மொஹமட் ஜாவட் ஸரிஃப், சவுதி தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் யேமனில் அர்த்தமற்ற போர் ஒன்றில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.  bbc.tamil.com

கருத்துகள் இல்லை: