
சிறுபான்மை இன மதகுரு ஒருவருக்கு சவுதி அரேபியா சனிக்கிழமை மரண தண்டனையை நிறைவேற்றியதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே உறவுகள் மோசமடைந்தன.
கடந்த சனிக்கிழமை ஷேக் நிம்ர்-அல்-நிம்ர் உட்பட 47 பேருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பயங்கரவாதக் குற்றச்சாட்டில் அவர்கள் குற்றவாளிகள் எனக் கூறி அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இரானுடனான ராஜதந்திர உறவுகள் முறித்துக் கொள்ளப்பட்டதை சவுதியின் வெளியுறவு அமைச்சர் அடேல்-அல்-ஜுபைர் உறுதிப்படுத்தியுள்ளார். ஷியா பெருமபான்மை நாடுகளில் சவுதிக்கு எதிரான போராட்டங்கள் தொடருகின்றன.;இதையடுத்து சவுதியிலுள்ள அனைத்து இரானிய தூதரக அதிகாரிகள் அனைவரும் 48 மணி நேரத்துக்குள் வெளியேறுமாறு கூறப்பட்டுள்ளனர். அந்த மதகுருவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரானியத் தலைநகர் தெஹ்ரானிலுள்ள சவுதி தூதரகத்தை முற்றுகையிட்டு தாக்குதலை நடத்தினர்.bbc.tamil.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக