சென்னை ஐகோர்ட்டுக்கு தற்காலிகமாக மத்திய படை பாதுகாப்பு தேவை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகத்துக்கு இடமில்லாமல் தமிழக போலீஸ் மீது நம்பிக்கை இல்லை என நீதிபதி கூறினார். மத்திய படை பாதுகாப்பு கோரிய வழக்கில் தமிழக அரசின் பதிலை ஏற்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
கூடுதல் பாதுகாப்பு தரப்படும் என்ற பதிலை தலைமை நீதிபதி கவுல் ஏற்க மறுத்தார். குறைந்தபட்சம் 6 மாதமாவது மத்திய படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் உறுதிபட தெரிவித்துள்ளது. மாநில காவல்துறையுடன் மத்திய போலீசும் பாதுகாப்புக் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் மத்தியப் பாதுகாப்பு தொடர்பாக அக்ிடோபர் 30ம் தேதிக்குள் தமிாக அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. dinakaran.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக