செவ்வாய், 13 அக்டோபர், 2015

கோவிலுக்கு செல்லும் ஸ்டாலின் ஆற்காட்டார் ஜெ.அன்பழகன்....என்னய்யா நடக்கிறது திமுகவில்?

சென்னை: திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலுக்கு ஸ்டாலின் போனலும் போனார் சமூக வலைத்தளங்களில் போட்டு திமுகவை வறுத்தெடுத்து வருகின்றனர் வலைஞர்கள். எல்லாம் டிராமா என்கிறது நமது எம்ஜிஆர். ஆனால் அதெல்லாம் இல்லை திமுகவில் இந்துக்கள் அதிகம் இருக்கின்றனர் என்று அறிக்கை விடுகிறார் ஸ்டாலின், இதற்கும் பெரியார் சீடர்கள் பதிலடி தருகிறார்கள். அதைவிட முக்கியமான விசயம், ஸ்டாலின் கோவிலுக்குப் போய் பாதை காட்டியதன் விளைவாக திமுகவினர் பலரும் கோவில்களுக்கு படையெடுத்து வருகின்றனர். திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததற்காக, அப்போது திமுகவில் இருந்த நடிகர் சிவாஜி கணேசன் கட்சியை விட்டே நீக்கப்பட்டார். அதே பாணியில், தற்போது கோவிலுக்கு போகும் திமுகவினரை கட்சியை விட்டு நீக்குவாரா தலைவர் கருணாநிதி என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க திமுகவினர் பலரும் இப்போது கோவிலுக்கு பகிரங்கமாக படையெடுத்து வருகின்றனர். ஜெ.அன்பழகன் தி.நகரில் உள்ள விநாயகர் விநாயகர் சதுர்த்தி கொண்டாடியதை பகிரங்கமாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய ஜெ.அன்பழகன், மாலை மரியாதையுடன் கோவிலில் எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
திமுகவின் முன்னாள் பொருளாளரும் திராவிய இயக்க பாரம்பரியத்தில் ஊறியவருமான முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, திருக்கடையூர் அபிராமி கோவிலுக்கு சென்று ஆயுள் ஹோமம் செய்து திரும்பியிருக்கிறார். எல்லாம் ஸ்டாலின் கொடுத்த துணிச்சல்தான் என்கின்றனர்
என்னதான் ஸ்டாலின் கோவிலுக்குப் போனாலும், ஷூ காலுடன் பூரண கும்பமரியாதையை ஸ்டாலின் ஏற்றுள்ளது சர்ச்சையை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

Read more at//tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: