ஞாயிறு, 11 அக்டோபர், 2015

மாறுவேடத்தில் சரணடைந்த யுவராஜ்....பட்டதாரி கோகுல்ராஜ் கொலைவழக்கில் .....

சேலம் மாவட்டம் ஓமலூரைச்சேர்ந்த என் ஜினியரிங் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ், போலீசாரால் தேடப்பட்டு வந்தார். 107 நாட்கள் தலைமறைவாக இருந்த யுவராஜ், நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார். இன்று காலை 10.30 மணிக்கு சரணடையப்போவதாக நேற்றே வாட்ஸ் அப் மூலம் தகவல் சொல்லியிருந்தார் யுவராஜ். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் காலையில் இருந்தே சிபிசிஐடி அலுவலகத்தை சுற்றிலும் குவிந்திருந்தனர். போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர். 10.30 மணிக்கு எந்த பக்கத்திலிருந்து வருகிறார், எந்த வாகனத்தில் வருகிறார் என்று எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தனர். சிபிசிஐடி அலுவலகத்திற்குள் நுழைந்து சரண்டைவதற்குள் அவரை கைது செய்துவிடவேண்டும் என்று போலீசார் துடித்தனர். ஆனால் அது நடக்கவில்லை. 11 மணிக்கு டிவிஎஸ் - 50 வண்டியில், முன்னால் ஒருவர் டூவீலரை ஓட்டிக்கொண்டு வர, பின்னால் உட்கார்ந்துகொண்டு, மாறு வேடத்தில் வந்து இறங்கினார் யுவராஜ்.லுங்கி கட்டிக்கொண்டு, கறுப்பு நிற டீ சர்ட் போட்டுக்கொண்டு, தலையில் சிகப்பு நிற தொப்பி போட்டுக்கொண்டு வந்திறங்கிய யுவராஜை அவ்வளவாக யாரும் கண்டுகொள்ளவில்லை. வண்டியில் இருந்து இறங்கியதும், லுங்கி, டீ.சர்ட் தொப்பியை அகற்றிவிட்டு, உள்ளே ஏற்கனவே போட்டிருந்த வெள்ளை சட்ட உடையுடன் விறுவிறுவென்று நடந்தார். அவரை அவரது ஆதரவாளர்கள் சூழ்ந்துகொண்டு, போலீஸ் பிடியில் சிக்காதவாறு, சிபிசிஐடி அலுவலகத்திற்குள் கொண்டு விட்டனர். அங்கு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.nakkheeran.in

கருத்துகள் இல்லை: