புதுடில்லி:தனியார் நிறுவனங்களுக்கு, கூடுதல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு
செய்ததில் நடந்த முறைகேடு குறித்த வழக்கில், தொலை தொடர்பு துறை முன்னாள்
செயலர் ஷ்யாமல் கோஷை விடுவித்து, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது.
பொய்
வழக்கு போட்டதற்காக, சி.பி.ஐ.,க்கு கடும் கண்டனமும் தெரிவித்தது.
சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் நடந்த,
முறைகேடு தொடர்பான பல்வேறு வழக்குகளை, டில்லியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு
கோர்ட் விசாரிக்கிறது. முந்தைய காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சி
காலத்தில் நடந்த, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு,
கூடுதல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டதில் நடந்த முறைகேடு உள்ளிட்ட வழக்குகள்,
இவற்றில் முக்கியமானவை. ஒரு லட்சத்து எழுபது ஆறு ஆயிரம் கோடி இப்போ வெறும் 840 கோடிக்கு வந்துள்ளது இனி எவ்வளவு நயா பைசா வரை வரும் என்று வெள்ளி திரையில் காண்க.....
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த வழக்கில், மத்திய தொலை தொடர்பு துறை முன்னாள் அமைச்சரும், தி.மு.க.,வைச் சேர்ந்தவருமான ராஜா மற்றும் தொலை தொடர்பு நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது, குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது. கடந்த, 2002ல், தனியார் நிறுவனங்களுக்கு, கூடுதல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடு காரணமாக, அரசுக்கு, 846 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில், மத்திய தொலை தொடர்பு துறை செயலராக இருந்த ஷ்யாமல் கோஷ் மீதும், ஹட்சிசன் மேக்ஸ், ஸ்டெர்லிங் செல்லுலார், பார்தி செல்லுலர் தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் மீதும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலை யில், இந்த வழக்கில் முக்கியமான உத்தரவை, சிறப்பு கோர்ட் நீதிபதி ஓ.பி.சைனி பிறப்பித்தார்;
அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்த வழக்கில், ஷ்யாமல் கோஷ் மீதும், மூன்று நிறுவனங்கள் மீதும், பொய்யாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. உண்மைக்கு மாறான தகவல்களை திரித்து, குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது; இது, கடும் கண்டனத்துக்குரியது. பொய் வழக்கு போட்டதன் மூலம், இந்த கோர்ட்டை, சி.பி.ஐ., தரப்பு தவறாக வழிநடத்த முயற்சித்துள்ளது.
ஷ்யாமல் கோஷ் மற்றும் மூன்று நிறுவனங்களுக்கு எதிராக, எந்த வலுவான ஆதாரமும், கோர்ட்டில் தாக்கல் செய்யப்படவில்லை.
பொய் வழக்கு போட்ட அதிகாரிகள் மீது, சி.பி.ஐ., நடவடிக்கை எடுக்க வேண்டும். கோர்ட்டின் நேரம்பொய் வழக்கு காரணமாக, கோர்ட்டின் நேரம் வீணடிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. வழக்கிலிருந்து, ஷ்யாமல் கோஷ் மற்றும் மூன்று நிறுவனங்களும் விடுவிக்கப்படுகின்றன. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.தினமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக