செவ்வாய், 13 அக்டோபர், 2015

ஸௌதியில் பிரித்தானிய முதியவருக்கு 350 கசையடி....வைன் தயாரித்ததாக...


குடும்பத்தினரை விட்டு தனியே சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த எழுபத்து நான்கு வயது முதியவர், சொந்தமாக ஒயின் என்கிற மதுபானத்தைத் தயாரித்தமைக்காக அவருக்கு முந்நூற்று ஐம்பது கசையடியை தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக சவுதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனத்துக்காக பணிபுரிந்து வந்த இங்கிலாந்துக்காரர் கார்ல் ஆந்த்ரே (74), கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டவிரோதமாக ஒயின் தயாரித்ததாக கருதப்பட்டதால் கைது செய்யப்பட்டார். மூன்று முறை புற்றுநோயாலும், தற்போது ஆஸ்துமாவாலும் பாதிக்கப்பட்டுள்ள கார்லுக்கு, ஒராண்டு சிறை தண்டனையும், 350 கசையடியும் வழங்குமாறு இந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, கார்ல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஒராண்டு சிறை தண்டனைக்குப் பின்னர் வழங்கப்பட இருக்கும் கசையடியை நிறைவேற்றக் கூடாது என அவரது மகன் மன்றாடி வருகின்றார். இந்த காட்டு மிராண்டி நாட்டுக்கு இவனுக ஏன்தான் சப்போர்ட் பண்றாய்ங்களோ தெரியல்ல..


இத்தனை ஆண்டுகளாக மகிழ்ச்சியாக சவுதி அரேபியாவில் பணியாற்றிய கார்லுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தத் தண்டனை, அவரது உயிரையே பறிக்கலாம் என அஞ்சும் இவரது மகன் இங்கிலாந்து அரசாங்கம் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

சவுதி அரேபியாவின் இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் கார்லை அவ்வப்போது சிறைக்குச் சென்று அவரது உடல் நலம் தொடர்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றனர். எனினும், இந்த தண்டனை ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என கருதப்படுகின்றது. மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: