டெல்லி: இலங்கை உள்நாட்டு, போரில் உயிரிழந்த தமிழர்கள்
குடும்பத்தாருக்கு இந்தியா சார்பில், வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுகின்றந.
இந்த வீடுகள் கட்டுவதற்கு பணம் ஒதுக்க வேண்டுமானால், தன்னுடன், படுக்கையை
பகிர வேண்டும், என்று செஞ்சிலுவை சங்க அதிகாரியால் பெண்கள்
நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டையடுத்து இந்தியா விசாரணையை
தொடங்கியுள்ளது.
இலங்கையில், உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட, தமிழர்களுக்காக, இந்தியா,
50ஆயிரம் வீடுகளை கட்டித் தரும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்திய அரசுடன்,
இலங்கை மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கங்களும், இப்பணியை மேற்பார்வையிட்டு
வருகின்றன.
கடந்த மார்ச் மாதம் யாழ்ப்பாணம் சென்ற பிரதமர் நரேந்திரமோடி, பாதிக்கப்பட்ட
சிலருக்கு வீடுகளை வழங்கினார்.
இந்நிலையில் இலங்கை பத்திரிகையொன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்த பெண்
ஒருவர், வீடு வேண்டுமெனில் படுக்கையை பகிர செஞ்சிலுவை சங்க அதிகாரி
கட்டாயப்படுத்துவதாக கூறியிருந்தார்.
கிளிநொச்சி மாவட்டம் முழங்காவில் பகுதியை சேர்ந்த பெண்தான் இக்குற்றச்சாட்டை கூறியுள்ளார். கிளிநொச்சி பகுதியை சேர்ந்த அந்த அதிகாரி விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று இலங்கை அறிவித்தது. இலங்கைக்கான செஞ்சிலுவை சங்கமும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கிறது. இதனிடையே, விவகாரத்தை சீரியசாக எடுத்துள்ளது இந்திய வெளியுறவுத்துறை. உரிய விசாரணை நடத்த இந்தியா தயாராக இருப்பதாக இலங்கையிடம் கூறியுள்ள இந்தியா, அதுவரையிலும், குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரை வெளிநாடு செல்ல அனுமதிக்காமல் தடுத்து வைக்கவும் கோரிக்கைவிடுத்துள்ளது. இதுபோன்ற குற்றச்சாட்டு தற்போதுதான் முதல்முறையாக இந்தியாவுக்கு எதிராக வந்துள்ளதாகவும், இந்த விவகாரத்தை சீரியசாக எடுப்போம் என்றும், வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் ஆங்கில பத்திரிகையொன்றிடம் கூறியுள்ளார்
Read more at:/tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக