திங்கள், 12 அக்டோபர், 2015

யுவராஜை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நாமக்கல் நீதிமன்றம் அனுமதி

சேலத்தைச் சேர்ந்த பொறியாளர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ், நூறு நாள் தலைமறைவுக்கு பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை நாமக்கல் நகரிலுள்ள சி.பி.சி.ஐ.டி காவல்துறை அலுவலகத்தில் சரணடைந்தார். இரவு 11.00 மணிவரை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பின்னர் நாமக்கல் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து அவரை நாமக்கல் கிளை சிறையில் அடைத்தனர். பின்னர் இன்று காலை மீண்டும் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்த போலீசார் அவரை ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி மலர்மதியிடம் அனுமதி கேட்டு மனு செய்தனர். அந்த மனுவை பரிசீலித்த நீதிபதி ஐந்து நாள் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்துக்கொள்ள அனுமதியளித்துள்ளார். இதை தொடர்ந்து நாமக்கல், சேலம் சாலையில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சிவசுப்பிரமணியன் nakkheeran,in

கருத்துகள் இல்லை: