கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் நாள்தோறும் தங்கம் வெல்லும் தகுதி தமிழகத்துக்கு இல்லை
அமேசான் இணையதள வர்த்தக நிறுவனம் மீது தந்தை பெரியார்
திராவிடர் கழகம் சார்பில் புதன்கிழமை மாநகரக் காவல் ஆணையரிடம் மோசடி புகார்
அளிக்கப்பட்டது.
தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர்
கு.ராமகிருஷ்ணன் புதன்கிழமை கோவை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம்
புகார் ஒன்றை அளித்தார்.
அதில், தமிழகத்தில் வெளிவரும் தமிழ் மற்றும் ஆங்கில
நாளிதழ்களில் கடந்த இரு தினங்களாக அமேசான் என்ற இணையதள வர்த்தக நிறுவனம்
முழுப்பக்க விளம்பரங்களைக் கொடுத்துள்ளது.
அந்த விளம்பரத்தில் அமேசான் இணையதள செயலி மூலமாக
பொருள்களை வாங்குங்கள், நாள்தோறும் ஒரு கிலோ தங்கம் வெல்வதற்கான வாய்ப்பை
பெறுங்கள் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
விளம்பரத்தைப் பார்க்கும் பொதுமக்கள் அவர்கள்
விளம்பரப்படுத்தியுள்ள பொருள்களை வாங்கினால் ஒரு கிலோ தங்கம் வெல்லும்
வாய்ப்பினை பெறலாம் என்று எண்ணி பொருள்களை வாங்கும் வாய்ப்புள்ளது.
ஆனால், அமேசான் நிறுவன இணையதள முகவரியில்
அதிகாரப்பூர்வமான விதிகள் என்று கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் நாள்தோறும்
தங்கம் வெல்லும் தகுதி தமிழகத்துக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த விதி நாளிதழ்களில் கொடுக்கப்பட்டுள்ள
விளம்பரங்களில் குறிப்பிடப்படவில்லை. இது ஒரு நூதன மோசடியாகும். இதனால்
லட்சக்கணக்கான தமிழக மக்கள் ஏமாறும் வாய்ப்பு உள்ளதால் உடனடியாக இந்த
விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் மோசடியாக மக்களை ஏமாற்றும்
இந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது dinamani.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக