வெள்ளி, 23 அக்டோபர், 2015

35 சாஹித்திய விருதுகளை திரும்ப தந்துள்ளனர்....டெல்லியில் மௌன ஊர்வலம்..எழுத்தாளர்கள் மீது தாக்குதல்களைக் கண்டித்து...


கருத்துரிமை மீதான தாக்குதல்களுக்கு சாஹித்திய அகாடெமி கண்டனம்
இந்தியாவில் சகிப்புத்தன்மையற்ற சூழல் அதிகரித்து வருவதாகக் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்தியத் தலைநகர் டில்லியில் சுமார் 100 எழுத்தாளர்கள் மௌன ஊர்வலம் ஒன்றை நடத்தினர்.இந்திய எழுத்தாளர்கள் மீது தாக்குதல்களைக் கண்டித்து மௌன ஊர்வலம் பின்னர் அந்த எழுத்தாளர்கள் இந்தியாவின் முன்னணி இலக்கிய அமைப்பான, சாஹித்திய அக்காடெமிக்கு , அளித்த மனு ஒன்றில், கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்க நடவடிக்கைகளை எடுக்கக் கோரினர்.
கடந்த சில வாரங்களில் , 35 எழுத்தாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட கௌரவம் மிக்க விருதான, சாஹித்திய விருதுகளை, எழுத்தாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்துத் திரும்பத் தந்துள்ளனர்.
பிரதமர் மோடி இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக வெளிப்படையான ஒரு நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என்று அவர்கள் கோரினர்.

இதனிடையே, சாகித்திய அகாதமியின் செயற்குழு கூட்டத்தில், கல்புர்கி கொலை சம்பவம் உள்ளிட்ட, சமீப காலங்களில் அரங்கேறிய கருத்துரிமைக்கு எதிரான தாக்குதல் சம்பவங்களுக்கும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சாகித்திய அகாதமியின் விருது பெற்ற 40 எழுத்தாளர்கள் அவற்றை திரும்ப அளித்துள்ளது தொடர்பான விவாதங்களை மேற்கொள்ள இன்று வெள்ளிக்கிழமை செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
அப்போது மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக, செயற்குழு கூட்டத்தில் இடம்பெற்றிருந்த தமிழ் மொழிக்கான பிரதிநித்துவ உறுப்பினரான முனைவர் கிருஷ்ணசாமி நாச்சிமுத்து தெரிவித்தார். அதில் கல்புர்கி கொலை சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மற்றொன்றில் கல்புர்கி கொலை சம்பவத்திற்கும், சமீபகாலங்களில் சகிப்பு தன்மை குறைந்து காணப்படுவதற்கும், கருத்து சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களுக்கும் என இவை அனைத்திற்கும் கண்டனம் தெரிவித்து ஒரு தீர்மானம் நிறைவேறியது.
அதைப்போல் சாகித்திய அகாதமியின் விருதுகளை திரும்ப அளித்த எழுத்தாளர்கள், அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என கோரியும் மூன்றாவது தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

போட்டி ஆர்ப்பாட்டம்

இதற்கிடையே இந்திய அரசின் ஆதாரவுடன், தன்னிச்சையாக, நாட்டில் உள்ள மொழிகளின் இலக்கிய வளர்ச்சிக்கான அமைப்பான சாகித்திய அகாதமிக்கு எதிராக போராடுவது என்பது நியாயமற்றது என கூறும் மற்றொரு தரப்பு எழுத்தாளர்கள், விருதுகளை திரும்ப அளித்த எழுத்தாளர்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்தியாவில் மிகவும் அறியப்பட்ட பகுத்தறிவு சிந்தனையாளர்களில் ஒருவரும் முன்னாள் பல்கலைக்கழக துணை வேந்தருமான டாக்டர் மல்லேசப்பா கல்புர்கி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த சில எழுத்தாளர்கள், நாட்டில் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறி தங்களுக்கு வழங்கப்பட்ட சாகித்திய அகாதமி விருதுகளை திரும்ப அளித்தனர்.
இந்த விவகாரம் ஊடகங்களில் மிகப்பெரிய விவாதப்பொருளாக உருமாறியது. அப்போது இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் சில மூத்த தலைவர்கள் கருத்து கூறிய போது, விருதை திரும்ப அளிக்கும் விவகாரம் என்பது, சில அரசியல் கட்சிகளின் உந்துதல் காரணாமாக நடைபெறுவதாக விமர்சனம் செய்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த சாகித்திய அகாதமி விருதை பெற்ற மற்ற எழுத்தாளர்கள் இதற்கு கண்டனம் வெளியிட்டார்கள். அவர்களில் சிலரும் கூட தங்களுக்கு வழங்கப்பட்ட விருதினை திரும்ப அளித்தனர். bbc.tamil.com

1 கருத்து:

Kaja Bantha Navas சொன்னது…

Mahan modi ye mahan ethu masthan government modi masthan