வியாழன், 22 அக்டோபர், 2015

டிஜிட்டல் இந்தியா' திட்டத்தை கொண்டு வந்தது ராஜிவ்: பிட்ரோடா

மும்பை:''டிஜிட்டல் இந்தியா எனப்படும், அனைத்து துறைகளிலும் தகவல் தொழில்நுட்ப திட்டத்தை தொடங்கியது, முன்னாள் பிரதமர் ராஜிவ்; இப்போதைய பிரதமர் நரேந்திர மோடியல்ல,'' என, இந்திய தகவல் தொழில்நுட்ப உலகின் தந்தை என பாராட்டப்படும், சாம் பிட்ரோடா கூறியுள்ளார்.
பிரதமராக ராஜிவ் இருந்த போது, இந்திய தொலை தொடர்பு கமிஷனின் தலைவராக, சாம் பிட்ரோடா நியமிக்கப்பட்டார். இவர் மேற்கொண்ட நடவடிக்கைகளால் தான், தொலை தொடர்புத்துறையில், இந்தியா மாபெரும் வளர்ச்சி பெற முடிந்தது.
பெரிய கனவு; இந்தியாவை இணைப்பதற்கான பயணம்' என்ற தலைப்பில், தன் சுயசரிதையை பிட்ரோடா எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை, மும்பையில், 'ரிலையன்ஸ்' நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, வெளியிட்டார். அப்போது, பிட்ரோடா பேசியதாவது: இப்போதைய அரசால் பின்பற்றப்படும், 'டிஜிட்டல் இந்தியா' புதிய திட்டம் இல்லை. இது, இப்போதைய பிரதமர் மோடியின் திட்டமும் இல்லை. இந்த திட்டத்தை தொடங்கியது ராஜிவ், 25 ஆண்டுக்கு முன், இந்த திட்டம் தொடங்கப்பட்டது  ஐ டி துறை முன்னேற ராஜீவ் மட்டும் காரணமில்லை. 1977 இல் தொழில்துறை மந்திரியாக வந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஏகபோகமாக ( காயலாங்கடைக்குப் போகவேண்டிய ) பழைய கம்பியூட்டர்களை மட்டும் இறக்குமதி செய்து விற்ற ஐ பி எம் மை துரத்தி வெளியேற்றினார்.அதனால் நம்பிக்கையடைந்த பல இந்திய தொழில் முனைவோர்கள் சிறு நடுத்தர கம்பியூட்டர் தொழிற்சாலைகளை நிறுவினர் ( அப்போது HCL ஷிவ் நாடார் போன்றவர்கள் வெளிநாடுகளிலும் எலெக்ட்ரானிக் வர்த்தகத்தைத் துவக்கினர்


இது முழுமை பெற இன்னும், 20 ஆண்டுகளாகும்.எனினும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தை, வேகமாக செயல்படுத்த மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. 'மேக் இன் இந்தியா' எனப்படும், இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம் வெற்றி பெற வேண்டும் என்றால், உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த வேண்டும்.தரமான சாலைகள், இடைவிடாத மின்சாரம், திறமையுள்ள தொழிலாளர்கள் இருந்தால் தான், மேக் இன் இந்தியா திட்டம் வெற்றி பெறும்.இவ்வாறு சாம் பிட்ரோடா கூறினார்.
மும்பை:''டிஜிட்டல் இந்தியா எனப்படும், அனைத்து துறைகளிலும் தகவல் தொழில்நுட்ப திட்டத்தை தொடங்கியது, முன்னாள் பிரதமர் ராஜிவ்; இப்போதைய பிரதமர் நரேந்திர மோடியல்ல,'' என, இந்திய தகவல் தொழில்நுட்ப உலகின் தந்தை என பாராட்டப்படும், சாம் பிட்ரோடா கூறியுள்ளார்.
பிரதமராக ராஜிவ் இருந்த போது, இந்திய தொலை தொடர்பு கமிஷனின் தலைவராக, சாம் பிட்ரோடா நியமிக்கப்பட்டார். இவர் மேற்கொண்ட நடவடிக்கைகளால் தான், தொலை தொடர்புத்துறையில், இந்தியா மாபெரும் வளர்ச்சி பெற முடிந்தது.

'பெரிய கனவு;

இந்தியாவை இணைப்பதற்கான பயணம்' என்ற தலைப்பில், தன் சுயசரிதையை பிட்ரோடா எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை, மும்பையில், 'ரிலையன்ஸ்' நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, வெளியிட்டார்.

அப்போது, பிட்ரோடா பேசியதாவது:இப்போதைய அரசால் பின்பற்றப்படும், 'டிஜிட்டல் இந்தியா' புதிய திட்டம் இல்லை. இது, இப்போதைய பிரதமர் மோடியின் திட்டமும் இல்லை. இந்த திட்டத்தை தொடங்கியது ராஜிவ், 25 ஆண்டுக்கு முன், இந்த திட்டம் தொடங்கப்பட்டது; இது முழுமை பெற இன்னும், 20 ஆண்டுகளாகும்.எனினும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தை, வேகமாக செயல்படுத்த மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. 'மேக் இன் இந்தியா' எனப்படும், இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம் வெற்றி பெற வேண்டும் என்றால், உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த வேண்டும்.தரமான சாலைகள், இடைவிடாத மின்சாரம், திறமையுள்ள தொழிலாளர்கள் இருந்தால் தான், மேக் இன் இந்தியா திட்டம் வெற்றி பெறும்.இவ்வாறு சாம் பிட்ரோடா கூறினார். dinamalar.com

கருத்துகள் இல்லை: