சனி, 24 அக்டோபர், 2015

குறும்படங்கள் வியாபார வெற்றியை பெற முடியும்....அதற்கு....



thamizhstudio.com :குறும்படங்களை சந்தைப்படுத்துவதில் பெரிய சிக்கல்கள் இருந்துக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு முறையும் குறும்படங்களை சந்தைப்படுத்துவதற்காக பலர் முயற்சி எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அதற்கு குறும்பட இயக்குனர்கள் சரியான ஒத்துழைப்பு தருவதில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. காரணம் அவர்களுக்கு குறும்படம் என்பது திரைப்படங்களில் நுழைவதற்கு ஒரு நுழைவு சீட்டு. எனவே அதை வைத்து பொருள் ஈட்டுவதற்கு அவர்கள் பெரிதும் சிரமப்படுவதில்லை. அதன் மூலம் தங்களுக்கு ஏதாவது திரைப்பட வாய்ப்பு கிடைத்தால் போதும் என்றே நினைக்கிறார்கள்.
தற்போது BOLLYVERSE LLC என்கிற நிறுவனம் குறும்படங்களை சந்தைப் படுத்தும் புது முயற்சி ஒன்றை தொடங்கி இருக்கிறது.
இவர்கள் குறும்படங்களை இணையம் மற்றும் Apple iphone, Android devices வழியாகவும் அவர்களின் சந்தாதாரர்கள் காண்பதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். இதன்படி ஆயிரம் சந்தாதாரர்கள் ஒரு குறும்படத்தை பார்த்தார்களேயானால் அந்த குறும்பட தயாரிப்பாளருக்கு இந்த நிறுவனத்தார் $ 50 தருவார்கள். இதில் முக்கியமானது இவர்கள் இதை ஒரு சேனலாக உலகம் முழுவதும் கொண்டு செல்கிறார்கள். எனவே உங்கள் குறும்படம் நன்றாக இருந்தால் பார்வையாளர்கள் தொடர்ந்து அதனை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
தற்போது அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் கனடாவில் மட்டுமே இவர்கள் சேவை இருக்கிறது. விரைவில் உலகம் முழுவது தொடங்கும் என்று அறிவித்திருக்கிறார்கள். யூ டியூப் போன்ற இணையத்தில் சும்மாவே யாரோ ஒருவர் உங்கள் படத்தை பார்ப்பதற்கு இதுப் போன்ற இணைய சேனல் வசதியை நண்பர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆவணப்பட இயக்குனர்களும் விருப்பமிருந்தால் இவர்களை அணுகலாம். இவர்களை தொடர்பு கொள்ள: content@bollyverse.com என்கிற மின்னஞ்சலுக்கு எழுதுங்கள். உடனே பதில் கிடைக்கும்.
----------------------------------------------------------------------------------------------------------

Twilight Zone இதுவரை பெரும்பாலும் ஆங்கில குறும்படங்களை வாங்கி, வாரத்தின் இறுதி நாள் இணையத்தில் ஒளிபரப்பி வந்தார்கள். தற்போது தமிழ் குறும்படங்களையும் இவர்கள் வாங்கத் தொடங்கி இருக்கிறார்கள். குறிப்பாக நகைச்சுவை குறும்படங்களை அதிகம் வாங்குகிறார்கள். சும்மா ஆயிரம், இரண்டாயிரம் எல்லாம் இவர்கள் கொடுப்பதில்லை. ஒரு நல்ல தொகை கொடுத்தே குறும்படங்களை வாங்கிக்கொள்கிறார்கள் (55000 தாண்டியும் சில நண்பர்கள் வாங்கி இருக்கிறார்கள்). ஆனால் அதற்கு பிறகு உங்கள் குறும்படங்கள் உங்களுக்கு சொந்தமில்லை. அவர்கள் அதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தும் உரிமை பெற்றவர்களாக மாறிவிடுவார்கள்.
உங்கள் குறும்படங்களை நல்ல விலைக்கு விற்க விருப்பப்பட்டால் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் குறும்படங்களைப் பற்றியும், உங்களைப் பற்றியும் தகவல் அனுப்புங்கள்.
மின்னஞ்சல்: madhu@twilighten.com

கருத்துகள் இல்லை: