சனி, 24 அக்டோபர், 2015

சவுகார் பேட்டை...பயமுறுத்த வருகிறார் ராய் லக்ஷ்மி ....

சவுகார்பேட்டை’ படம் முழுக்க பேய்களின் அராஜகமும், ஆர்ப்பாட்டமும் நிறைந்திருக்கிறது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று(20.10.15) நடைபெற்றது. நடிகர் ஸ்ரீகாந்த், சுமன், வடிவுக்கரசி, ரேகா, இயக்குனர் வடிவுடையான், இசையமைப்பாளர் ஜான் பீட்டர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீகாந்த். பேய் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதும் இருந்தது. சவுக்கார் பேட்டை திரைப்படத்தில் அந்த ஆசை நிறைவேறியிருப்பதுடன், போனஸாக டபுள் ரோலில் நடித்திருக்கிறேன். ராய் லட்சுமி நிறைய பேய் படங்களில் நடித்தவர். என்னை விட அனுபவசாலி. அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். அவருக்கு அவரே மேக்-அப் போட்டுக்கொள்வதைப் பார்த்து பலமுறை வியந்திருக்கிறேன். சமயத்தில் ராய் லட்சுமி எனக்கே மேக்-அப் போட்டுவிடுவார்.
இயக்குனர் வடிவுடையான் எங்களை ரொம்பவும் வேலை வாங்கினார். அதற்கான ரிசல்ட்டை திரையில் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. கவிஞர் சொற்கோ எழுதியிருக்கும் சௌகார்பேட்டை சேட்டு, ஆகிப்போச்சு லேட்டு, வீட்ட கொஞ்சம் பூட்டு, இது பேய் வர்ற ரூட்டு’ என்ற பாடல் பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. nakkheeran,in


கருத்துகள் இல்லை: