செவ்வாய், 20 அக்டோபர், 2015

ராஜா சொத்து குவிப்பு வழக்கு: சி.பி.ஐ.,க்கு திடீர் நெருக்கடி

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மீதான வழக்கை துரிதப்படுத்தும்படி, சி.பி.ஐ.,க்கு மேலிடத்தில் இருந்து, நெருக்கடி கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தி.மு.க.,வைச் சேர்ந்தவர் ஆ.ராஜா. அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக, 27 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக, சென்னை சி.பி.ஐ., அலுவலகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அது தொடர்பாக, ராஜா, உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில், ஆகஸ்ட், 20ல் சோதனை நடந்தது. சென்னை, பெரம்பலுார், டில்லி, திருச்சி, கோவை உட்பட, 17 இடங்களில் நடைபெற்ற அதிரடி சோதனையில், 200க்கும் மேற்பட்ட சொத்து ஆவணங்கள், 6.5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், அந்த வழக்கு விசாரணையை துரிதப்படுத்தும்படி, சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு தற்போது நெருக்கடி அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ராசாவையும் கனிமொழியையும் எப்படியாவது தண்டிக்க வேண்டும் என்ற ரேஞ்சுக்கு வந்துள்ளார்கள் இதைதான் காங்காரு நீதி என்று சொல்வது.


இதுகுறித்து, சி.பி.ஐ., வட்டாரம் கூறியதாவது: பொதுவாக, சொத்துக் குவிப்பு வழக்குகளில், உடனுக்குடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது சிரமம். அதுவும், முன்னாள் மத்திய அமைச்சர் தொடர்பான வழக்கு என்பதால், மிகுந்த கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. பறிமுதல் செய்த ஆவணங்கள், நகைகளை சரி பார்த்து, ஆவணப்படுத்தும் பணி நடக்கிறது. ஆனால், மேலிடத்தில் இருந்து, இந்த வழக்கை துரிதப்படுத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படி, நெருக்கடி கொடுக்கப்படுகிறது. அதற்கான, பின்னணி தெரியவில்லை.இவ்வாறு சி.பி.ஐ., வட்டாரம் தெரிவித்தது. dinamalar.com

கருத்துகள் இல்லை: