வியாழன், 22 அக்டோபர், 2015

பா.ஜ., ஆட்சியில் தலித் மற்றும் ஏழைகளுக்கு பாதுகாப்பில்லை!

பரீதாபாத்:ஹரியானாவில், தலித் குழந்தைகள் இருவர் எரிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், வன்முறையை கட்டுப்படுத்த தவறிய, பா.ஜ., அரசை கண்டித்தார்.பரீதாபாத் அருகே உள்ள கிராமத்தில், ஜாதி தகராறு காரணமாக, தலித் ஒருவரின் வீட்டுக்கு சிலர் தீ வைத்தனர்.இதில் வீட்டில் இருந்த இரண்டு குழந்தைகள் உடல் கருகி இறந்துவிட்டனர். குழந்தைகளின் தாயும், தந்தையும் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் தொடர்பாக, 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பரீதாபாத்துக்கு நேற்று காலை சென்ற, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், இறந்த குழந்தைகளின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.பின், வன்முறையை கட்டுப்படுத்த தவறிய, மனோகர் லால் கட்டார் அரசை கண்டித்தார்.  முதலில் மாட்டு இறைச்சி பிரச்னை பண்ணி ஒரு முஸ்லிமை கொன்றனர் . அதை மறைக்க ரெண்டு தலித் குழந்தைகளை எரித்தனர் . நேற்று அதை மறைக்க சீக்கியர்களின் புனித நூலை கிழித்தனர் .ஒன்றை விட மற்றது பெருசா இருக்கும் போது சின்ன விஷயம் மறந்து போகும் .விரலில் அடிபட்டு கத்தி கொண்டு ஆசுபத்திரி போனால் அங்கே கை உடைந்து ஒருவர் அமர்ந்து இருப்பார்.கத்தி கொண்டுவந்தவர் அமைதியாகி விடுவார் . இதனால் தான் இந்தியாவின் புகழ் உயர்ந்து வருகிறது


இந்த சம்பவத்துக்கு, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

லக்னோவில் அவர் கூறியதாவது:பா.ஜ., ஆட்சியில் தலித் மற்றும் ஏழைகளுக்கு பாதுகாப்பில்லை. சுதந்திரம் அடைந்து, 68 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையிலும், தலித்துகள் மீதான தாக்குதல் குறையவில்லை. மத்திய அரசும், மாநில அரசுகளும், தலித்களிடம் பாரபட்சமாக நடந்து கொள்கின்றன.இவ்வாறு மாயாவதி கூறினார்.

ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் கூறுகையில்,'' பா.ஜ., ஆட்சியில் தலித்களுக்கு எதிரான கொடுமை அதிகரித்துள்ளது. இட ஒதுக்கீட்டால் தலித்கள் அதிகம் பலனடைகின்றனர் என்பதால் தான், இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் விரும்புகிறார்,'' என்றார்.

பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் கூறுகையில்,''பரீதாபாத்தில் நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது,'' என்றா தினமலர்.com

கருத்துகள் இல்லை: