ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

சுவாமி பிரேமானந்தவை முதலமைச்சர் விக்னேஸ்வரன் இப்போதும் வணங்குகிறாராம்!

Premanantha-birthday60004Premanantha-birthday60001வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனின் கொழும்பு இல்லத்தில் பிரேமானந்தா சுவாமிக்கு பூசை வழிபாடுகள் நடத்தப்பட்டு ஆராத்தி எடுக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.
நீதி துறையால் படுகொலை, பாலியல் வல்லுறவு ஆகிய கொடூரக் குற்றங்களைப் புரிந்தவர் என ஒன்றுக்கு இரண்டு தடவைகள் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட ஒரு காமுகனை முன்னாள் நீதியரசரான விக்னேஸ்வரன் கடவுளாகவும், குருவாகவும் போற்றி தலையில் வைத்து கூத்தடிப்பதை பொறுக்க முடியாத ஒரு வாசகர் இப்புகைப்படங்களை தாய்நாடு தளத்துக்கு அனுப்பி வைத்து உள்ளார்.வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனின் கொழும்பு இல்லத்தில் பிரேமானந்தா சுவாமிக்கு பூசை வழிபாடுகள் நடத்தப்பட்டு ஆராத்தி எடுக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.நீதி துறையால் படுகொலை, பாலியல் வல்லுறவு ஆகிய கொடூரக் குற்றங்களைப் புரிந்தவர் என ஒன்றுக்கு இரண்டு தடவைகள் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட ஒரு காமுகனை முன்னாள் நீதியரசரான விக்னேஸ்வரன் கடவுளாகவும், குருவாகவும் போற்றி தலையில் வைத்து கூத்தடிப்பதை பொறுக்க முடியாத ஒரு வாசகர் இப்புகைப்படங்களை தாய்நாடு தளத்துக்கு அனுப்பி வைத்து உள்ளார். என்ன இழவடா இது ? சதா தமிழ் கலாச்சாரத்தையும் சைவத்தையும்  தமிழையும் பற்றி  வகுப்பெடுத்து கொண்டே இவர்  இந்த காலாவதியாகி போன கிரிமினல் சாமியை கும்பிடுகிறரே ?இதை போய் ஐ நாவில் முறையிட முடியுமா? 
இத்துடன் சுவாமி பிரேமானந்தா குறித்த சில குறிப்புகளையும் இதில் பகிர்ந்து கொள்கின்றோம். “ சுவாமி பிரேமானந்தா இலங்கை மாத்தளையைச் சேர்ந்தவர். 1951 ஆம் ஆண்டு நவம்பரில் பிறந்த அவரின் பெயர் பிறேம்குமார். சித்து வேலைகள் கை வரப் பெற்றவர். அதனைப் பயன்படுத்தி 1972 இல் மாத்தளையில் ஓர் ஆச்சிரமத்தை ஆரம்பித்தார். 1983 இனக் கலவரத்தை அடுத்து, ஆசிரமத்தில் இருந்த ஒரு டசின் அநாதைக் குழந்தைகளையும், சில விசுவாசிகளையும் அழைத்துக் கொண்டு அகதிப் படகில் தமிழகம் சென்ற பிரேமானந்தா 1989 இல் திருச்சியில் பூபாலகிருஷ்ண ஆச்சிரமம் என்ற பெயரில் புதிய ஆச்சிரமத்தைத் தொடங்கினார். வாயில் இருந்து திருநீறு கொட்டுவது, சிவலிங்கம் வரவழைப்பது, அந்தரத்தில் கையை அசைத்து திருநீறு, குங்குமம், சந்தனத் தூள், உருத்திராட்சக் கொட்டை போன்றவற்றை வரவழைப்பது போன்ற சித்து வேலைகளை அதிசயமாகச் செய்து காட்டுவதால் பிரேமானந்தாவுக்கு அதிக மவுசு ஏற்பட்டது. அதனால் ஆசிரமத்துக்கும் பிரபல்யம் உண்டாயிற்று. சொத்துகள் சேர ஆரம்பித்தன. திருச்சி பாத்திமா நகரில் 150 ஏக்கர் விஸ்தீரணத்தில் ஆசிரமம் விசாலமாயிற்று. சுமார் நூறு சிறுவர்கள், நூறு சிறுமியர் என அநாதைக் குழந்தைகள் ஆச்சிரமத்தில் சேர்க்கப்பட்டு வளர்க்கப்பட்டனர். 1993 இறுதி வரை எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் ஆச்சிரமத்துக்குள், சுவாமியின் குடிலுக்குள் இடம்பெறும் பயங்கரங்கள் பற்றி செய்தி கசியத் தொடங்கியபோதுதான் நிலைமை விபரீதமாயிற்று. சில சிறுமிகள் ஆச்சிரமத்தை விட்டுத் தப்பி வந்து பொலிஸில் கொடுத்த புகார்களை அடுத்து பொலிஸ் விசாரணை ஆரம்பமாயிற்று. அப்போதுதான் தோண்டத் தோண்டப் பூதம் கிளம்பிய கதையாக பல மர்மங்கள் வெளிப்படத் தொடங்கின. அநாதைச் சிறுமியரை வைத்துத் அவரது உடல் பசியைத் தீர்த்த சுவாமியின் அடாவடித்தனங்கள், பித்தலாட்டங்கள் அம்பலமாயின. அந்த கால கட்டத்தில் சுவாமி பிரேமானந்தாவின் லீலைகளை விவரிக்காத நாளே தமிழகப் பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்குக் கிடையாது என்ற நிலைமை. சுவாமி பிரேமானந்தாவைப் போன்று வேடமிட்டு நகைச்சுவை நடிகர் செந்தில் பண்ணிய திரைப்படக் கலாட்டாவுக்குப் பெரு வரவேற்பு. நீதிமன்ற விசாரணைகளின் படி ஆகக் குறைந்தது பதின்மூன்று சிறுமிகளை பிரேமானந்தா பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை நிரூபணமாயிற்று. இதில் பல சிறுமிகள் பருவமடைய முன்னரும், பருவமடைந்து ஒரு மாதத்துக்குள்ளும் கூட சுவாமியால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாயிற்று. பிரேமானந்தாவினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமடைந்த சிறுமி ஒருவரின் கர்ப்பத்தைக் கலைக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அந்தக் கருவை மருத்துவ சோதனைக்கு உட்படுத்திய நிபுணர்கள் அதற்குக் காரணம் சுவாமி பிரேமானந்தாவே என்பதையும் நீதிமன்றத்தில் விஞ்ஞான ஆதரங்களோடு சமர்ப்பித்தனர். சிறுமிகளுக்கு எதிரான இத்தகைய பாலியல் கொடூரங்களை அறிந்து அதற்கு எதிராகக் கொதித்தெழுந்த ரவி என்ற ஆச்சிரம உதவியாளர் பிரேமானந்தாவினால் அடித்துக் கொலை செய்யப்பட்டு ஆச்சிரம சுற்றாடலிலேயே புதைக்கப்பட்டார். விசாரணைகளின்போது அவரது சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. பாலியல் வன்புணர்வைத் தாங்க முடியாமல் ஆச்சிரமத்தை விட்டு ஓட முயன்ற சிறுமிகள் வளைத்துப் பிடிக்கப்பட்டு சுவாமியினாலேயே தாக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர். பொலிஸ், நீதிமன்ற விசாரணைகளின் போது ஆச்சிரமத்தில் பிரேமானந்தா சுவாமிக்கு அடுத்த நிலையில் பொறுப்பில் இருந்த மாதாஜி திவ்வியதேவி ராணி என்ற பெண்மணி தலைமறைவானார். சுவாமியின் பாலியல் கொடூரங்களுக்குத் துணை நின்றவர் எனக் கருதப்படும் இந்த அம்மணி இன்னும் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாகவே இருக்கின்றார். அவர் கைது செய்யப்படவில்லை. நீதிமன்ற விசாரணையை அடுத்து 1997 ஓகஸ்டில் சுவாமி பிரேமானந்தாவுக்கும் அவரது உதவியாளர்கள் ஐவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொரு எதிரிக்கு இரண்டு வருடச் சிறை கிடைத்தது. சுவாமி உட்பட ஏழு எதிரிகளும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு இந்தியப் பணத்தில் 62 இலட்சம் ரூபா நஷ்டஈடு செலுத்தவும் உத்தரவிடப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து பிரேமானந்தா செய்த மேன்முறையீடு 2002 டிசெம்பரில் உயர்நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டு அவருக்கான தண்டனை உறுதி செய்யப்பட்டது. 2011 பெப்ரவரி 21 இல் 59 ஆவது வயதில் சிறையில் பிரேமானந்தா காலமானார். ”.thainaadu.com/

கருத்துகள் இல்லை: