செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

திருவரங்கம் தொகுதியில் புகார்களை விசாரிக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை . சந்தீப் குமார் சொல்கிறார்!

திருவரங்கம்  தொகுதியில் புகார்களை விசாரிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைத்தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறினார். வாகன சோதனை சென்னை தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு, சந்தீப் சக்சேனா அளித்த பேட்டி வருமாறு:- ஸ்ரீரங்கத்தில் பறக்கும்படையின் எண்ணிக்கையை 5-ல் இருந்து 40ஆக உயர்த்தி இருக்கிறோம். புகார் தெரிவிப்பதற்காக தேர்தல் கமிஷனின் 1950 என்ற போன் எண், திருச்சி மாவட்டத்துக்கான 04312467777 என்ற எண்ணும் 24 மணிநேரமும் இயங்கும் மேலும் வீடியோ கண்காணிப்புக் குழுவின் எண்ணிக்கையையும் உயர்த்தி இருக்கிறோம். வாகன சோதனைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. சோதனைச்சாவடிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


அதிகாரி மீது நடவடிக்கை

பணப்பட்டுவாடா பற்றி புகார் கொடுப்பவர்கள் அதற்கான ஆதாரங்களை கொடுக்க முன்வர வேண்டும். ஏனென்றால், புகாரை வாங்கி சம்பவ இடத்துக்குச் சென்றால் அங்கு அதுபற்றி யாரும் பேச முன்வருவதில்லை.

திருச்சிக்கு சென்றபோது தேர்தல் அதிகாரிகள், வேட்பாளர்கள், போலீஸ் அதிகாரிகளுடன் கலந்து பேசினேன். தேர்தல் தொடர்பான புகார் வந்தால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறேன். அப்படி செயல்படாத அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மது விற்பனை அதிகம்

தி.மு.க., பா.ஜ.க. கொடுத்துள்ள புகார்களை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ளேன். அதுபற்றி விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். 11-ந்தேதி மாலைக்கு மேல் வெளியிடங்களில் இருந்து வந்துள்ள அரசியல் கட்சியினர் ஸ்ரீரங்கம் தொகுதியில் இருந்து வெளியேறிவிட வேண்டும்.

கடந்த 5-ந்தேதியில் இருந்து அங்கு மதுபானத்தின் விற்பனை 2 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே இதுபற்றி தினமும் அறிக்கை கேட்டுள்ளேன். அந்த வகையில் மது விற்பனையை கண்காணித்து வருகிறோம்.

சிறப்பு பார்வையாளர்

அ.தி.மு.க., பா.ஜ.க. மோதல் குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர். அதுபற்றிய முழு விவரங்கள் எனக்கு வந்து சேரவில்லை. ஸ்ரீரங்கம் தொகுதிக்கு கர்நாடகாவின் தலைமைத் தேர்தல் அதிகாரி அனில்குமார் சிறப்பு தேர்தல் பார்வையாளராகச் சென்றுள்ளார் maalaimalar.com

கருத்துகள் இல்லை: