ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

Goa கோவாவுக்கு சர்வதேச அங்கீகாரம்; டாப்-10 'நைட்லைப் சிட்டி' பட்டியலில் 6-வது இடம்


Goa is not India: Official Trailer from openmindfilm on Vimeo.
'நேஷனல் ஜியாகிரபிக்' அமைப்பு நடத்திய நிகழ்வில் சுற்றுலாக்களின் அரசியாக கருதப்படும் கோவாவிற்கு டாப்-10 'நைட்லைப்' நகரங்களில் 6-வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் திலீப் பருலேக்கர் கோவா உலகிலேயே பாதுகாப்பான சுற்றுலாத்தலமாக மாறியிருப்பதாக பெருமிதம் கொண்டார். நேஷனல் ஜியாகிரபிக் வழங்கிய பட்டியலில் முதலிடத்தில் அயர்லாந்து நாட்டின் டப்லின், அதற்கடுத்ததாக, செர்பியாவின் பெல்கிரேடு, பொலிவியாவின் லா பாஸ், பிரேசிலின் சாவோ பாலோ, போர்டி ரோகோவின் சான் ஜூவான், இந்தியாவின் கோவா, ஸ்பெயின் நாட்டின் இபியா, டெக்சாஸிலுள்ள ஹூஸ்டன், கீரிஸ் நாட்டின் தெசலோங்கி, அசெர்பஜானின் பாகு ஆகிய சுற்றுலா தலங்கள் இடம்பெற்றன. ஆனால், அவற்றில் கோவா மட்டுமே அழகான நேர்த்தியான கடற்கரையை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுdailythanthi.com

கருத்துகள் இல்லை: