வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

அமெரிக்க போலீஸின் காட்டு மிராண்டித்தனம் ! இந்திய வயோதிபர் மீது இனவெறி தாக்குதல்?


வாஷிங்டன்: அமெரிக்காவில், அப்பாவி இந்தியர் ஒருவர், போலீஸ் தாக்குதலில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, பெரும் சர்சையை கிளப்பியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவர், சுரேஷ்பாய் படேல், 57. இவர், இருவாரங்களுக்கு முன், அலபாமா மாகாணம், ஹன்ஸ்வில்லி நகரில் வசிக்கும் தன் மகன் சிராக் படேல் வீட்டிற்கு சென்றுள்ளார். ஒரு நாள், வீட்டருகே நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அவரை போலீசார் மடக்கி விசாரித்துள்ளனர். ஆங்கிலம் தெரியாத படேல், திக்கித் திணறி, இந்தி கலந்த ஆங்கிலத்தில் பேசியுள்ளார். ஆனால், போலீசார், குற்றவாளியை பிடிப்பது போல், திடீரென்று படேல் மேல் பாய்ந்து, அவரது கையை பின்பக்கம் மடக்கி, தரையில் குப்புறப் போட்டு அமுக்கியுள்ளனர். இதனால் ரத்த காயத்துடன், முதுகுத் தண்டின் ஒரு பகுதி செயலிழந்து மீண்டும் நிமிர முடியாத பரிதாப நிலைக்கு படேல் ஆளானார்.  அமேரிக்கா மாப்பிளைக்கு மட்டுமே பொண்ண கொடுப்பேன்னு அடம் புடிக்குற மாமனார்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி. நீங்க பொண்ண கொடுத்துட்டு அதையே சாக்கா வெச்சு அமேரிக்கா சுத்தி பாக்கலாம்ன்னு நினைச்சா
இந்த சம்பவம், வெளிச்சத்திற்கு வந்து அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர தாக்குதல், ஆசிய மக்கள் மீதான அமெரிக்க போலீசாரின் இன வெறியையும், நிறபேத போக்கையும் தோலுரித்து காட்டுவதாக உள்ளது என, மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: சந்தேக நபர் ஒருவர் நடமாடுவதாக கிடைத்த தகவலின் பேரில், சுரேஷ்பாய் படேல் விசாரிக்கப்பட்டுள்ளார். அவரை விசாரித்த விதம் தவறு என்பதால், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே, ''படேல் குடும்பத்திற்கு, இந்த வழக்கு தொடர்பான அனைத்து உதவிகளும் அலபாமாவில் உள்ள இந்திய துணை தூதரகம் மூலம் செய்யப்படும்,'' என, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்து உள்ளார். dinamalar.com

கருத்துகள் இல்லை: