
ஹீரோயின் இருக்கும் இடத்தைத் தேடி ஹீரோ ஓடிவர. சுவாசிகாவை உண்மையாகவேகாதலிப்பது போல ஏகப்பட்ட புருடா விடுகிறார் சைதன்யா.வழக்கமாக எல்லா பெண்களிடத்திலும் தன் வேலையை காட்டுவது போல, இங்கேயும் தன் லீலைகளை அரங்கேற்றிவிடுகிறார். பிறகென்ன... எல்லாம் முடிந்த பிறகு டாடா பை-பை தான்!இது ஒருபுறம் இருக்க, சோனாவிடம் ஒரு அடிமையாய் கிடக்கிறார் ஹீரோ சைதன்யா. சோனாவுக்கு கொஞ்சம் தாகமெடுத்தால், அந்த தாகத்தை தணிக்க ஹீரோ உதவி செய்கிறார் என்றே சொல்லலாம். திடீரென ஒருநாள் ஹீரோவை ஆள்வைத்து அடிக்க சொல்கிறார் சோனா. என்னடா இதுன்னு? ஒரு கேள்வி வரும்போது, சோனாவின் தங்கையை ஹீரோ நாசம் செய்திருப்பது ஃப்ளாஷ் பேக்காக வந்து போகிறது. ஆக பாதிக்கபட்ட பெண்களெல்லாம் ப்ளே-பாய் ஹீரோவை ரவுண்டுகட்ட... என்ன ஆகிறது என்பதே க்ளைமாக்ஸ் சோனாவின் காட்சிகளில் கவர்ச்சி தலைதெரிக்க ஆடுவதால், அந்த காட்சிகளை சென்சார் கத்தரித்துவிட்டது என்பது தான் பலருக்கும் ஏமாற்றம். இருந்தாலும் கிடைக்கிற கேப்பில் சிக்ஸர் அடிக்கிறார் சோனா. ஒரு பெரிய நடிகை என பில்டப் கொடுத்து பாபிலோனாவை காட்டுவது நல்ல காமெடி. நான் குள்ளமான ஆண்கள் முதல் உயரமான ஆண்கள் வரை எல்லாவித ஆண்களையும் பார்த்திருக்கேன் என்று ஹீரோவைப் பார்த்து பாபிலோனா சொல்கிற வசனம் ஜாலி டைம்ஸ்! சிரிக்க வைக்க சொன்னால், கஞ்சா கருப்பு கடுப்பேற்றுகிறார்... ஷ்ஷ்ஷபா... முடியல!p;பாடல்கள் எல்லாமே சுமார் ரகம் தான். சில காட்சிகள் ஓவர் செண்டிமெண்ட் காட்டி நம் பொருமையை ரொம்பவே சோதிக்கிறது. அப்பாவித்தனமாக ஆண்களை நம்பி ஏமாறவேண்டாம் என்கிற ஒரு நல்ல மெசேஜ் சொல்ல முயன்ற இயக்குனர் ஏ.சரணாவை பாராட்டலாம் சோக்காலி - மெசேஜ் சொல்லும் முயற்சி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக