ஞாயிறு, 2 ஜூன், 2013

எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி:அவர் முற்போக்கு பேசினாலும் ஒரு அக்ரஹாரத்து கணவனாகவே வாழ்ந்துள்ளார்

மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதா ரங்கராஜனின் மனைவி அளித்த பேட்டி
இந்த வாரம் தினகரன் பத்திரிகையில்  வெளியாக உள்ளது..

அவரை விட்டு பிரியணும்னுதான் நினைச்சேன்…
அம்மா மடில படுத்து பல நேரம் அழுதிருக்கேன்… அவரோட வாழ பிடிக்கலைனு கதறியிருக்கேன்… ஆனா, குழந்தைகளோட ஒரு பொண்ணு தனியா வாழறது நல்லதுக்கில்லைனு அம்மா தடுத்துட்டாங்க… அவங்களை சொல்லி குற்றமில்லை.
 வசந்தத்தில்’இரண்டு பக்க நேர்காணல். ரங்கராஜன் ‘குடும்ப மனிதராக’ எப்படி வாழ்ந்தார்? அவரது சுபாவம் என்ன? என்பதை அவரது மனைவி சுஜாதா சற்று நிறைய பேசியிருக்கிறார். ரங்கராஜனின் மனநிலை எப்பொழுது மாறும் என்றே கண்டுபிடிக்க முடியாது, படிப்பது, எழுதுவது என எப்போதும் தனது வட்டத்திற்குள்ளேயே இருந்தார், எங்களுக்கான அன்பை அவர் வெளிப்படுத்தியதே இல்லை, தனது மகன்களின் வளர்ச்சியில் எந்த அக்கறையும் இல்லாமல் இருந்தார், அவர் எழுதியதை நான் படித்தால் அது அவருக்கு பிடிக்காது, அக்ரஹாரத்து பையனாகவே கடைசி வரைக்கும் இருந்தார், பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பார் என சுஜாதாவின் வெளியில் தெரியாத இன்னொரு முகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ‘

பெண்கள் வீட்டை விட்டு வெளியில் போகக் கூடாது’ என்ற மனநிலை உடையவராக சுஜாதா இருந்தார் என்பது மட்டும் சற்று அதிர்ச்சியாக இருந்ததே தவிர மற்ற எந்த குற்றச்சாட்டுகளும் அதிர்ச்சியை உருவாக்கவில்லை. தனது வாழ்நாளில் சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள், நாடகங்கள் என ஏகப்பட்ட எழுத்துக்களை எழுதிக் குவித்த இந்த மனிதன் குடும்பத்தையும் சேர்த்து கவனித்திருந்தால்தான் ‘எப்படி சாத்தியமானது?’ என அதிர்ச்சியடைந்திருப்பேன். ஏன் இப்பொழுதுதான் வெளியில் தெரிகிறது? குடும்பம், கணவன், பிள்ளைகள் என தனது வாழ்நாளின் பெரும்பகுதியை ‘கட்டுப்பெட்டித்தனமாக’வே நம் ஊர் பெண்கள் வாழ்ந்து முடித்துவிடுகிறார்கள். இதில் சாமானியனின் மனைவி, நடிகரின் மனைவி, அரசியல்வாதியின் மனைவி, எழுத்தாளனின் மனைவி என்ற எந்த வேறுபாடும் இல்லை. பெண்களுக்கு கணவரின் மறைவு என்பது ஒருவிதத்தில் விடுதலை. தனக்கான வாழ்வை வாழத் துவங்குவதற்கான சாத்தியத்தை உருவாக்கும் பிரிவு அது. இத்தனை வருடங்களாக அமைதியாக இருந்த திருமதி. சுஜாதா இப்பொழுது இப்படி பேசக் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தால் அந்த அப்பத்தா சொன்னதுதான் பொருந்துகிறது. 
எழுத்தாளனின் பிம்பம் இப்படி உடைவது ஒருவிதத்தில் நல்லதுதான். எழுத்தாளன் என்பவனும் இன்னொரு மனிதன்தானே. அவனை கடவுளாகவும், யோக்கியசீலனாகவும், ஒழுக்கவாதியாகவும் எதற்காக கட்டமைக்க வேண்டும்?
அந்தக் காலம் அப்படி. இந்தக் காலம் மாதிரி சமூக சூழல் இருந்திருந்தா நிச்சயம் அவரை விட்டு பிரிஞ்சிருப்பேன்…’’’அவரோட எழுத்துக்களை நான் படிச்சா திட்டுவாரு… சொல்லப் போனா புத்தகங்களை பெண்கள் படிக்கறதே அவருக்கு பிடிக்காது… சமையலறை, குடும்பத்தைத் தாண்டி பெண்கள் வெளிய வரக் கூடாதுங்கிறது அவர் கொள்கை…‘’அக்கிரகாரத்துல தன் பாட்டி வீட்லதான் அவர் வளர்ந்தாரு. அதனால அக்கிரகாரத்தை தாண்டி அவர் சிந்தனை வளரவேயில்லை. கடைசி காலம் வரைக்கும் அவருக்குள்ள இருந்தது அந்த அக்கிரகார சிறுவன்தான்…’’ இப்படி பல விஷயங்களை போட்டு உடைத்திருக்கிறார். தமிழகமே அந்த எழுத்தாளரின் நடைக்கு இன்றும் மயங்கியிருக்கிறது. அப்படிப்பட்டவரின் இன்னொரு முகத்தை முதல் முறையாக பதிவு செய்திருக்கிறார் அவர் மனைவி.
சுஜாதா குடும்பத்தின் நெருங்கிய நண்பர் விசாரித்ததில், திருமதி சுஜாதா “ஆப் தி ரெகார்ட்” பேசியதை எல்லாம் பேட்டி என்று எடுத்துக் கொண்டார்கள் என்பது தெரியவந்தது.. “எந்தப் பத்திரிகை, என்ன பேட்டின்னு கூட சரியா விசாரிக்காம சும்மா பேசிண்டிருந்தேன், கொஞ்சம் உளறவும் செஞ்சேன்” என்று கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: