சனி, 8 ஜூன், 2013

காஞ்சி சங்கரராமன் கொலைவழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது

சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையை வருகிற 17–ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
சங்கரராமன் கொலை வழக்கு
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி கோர்ட்டில் தலைமை நீதிபதி முருகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விஜயேந்திரர், ரகு, சுந்தரேச அய்யர் உள்ளிட்ட 9 பேர் ஆஜராயினர். ஜெயந்திரர் உள்பட 14 பேர் ஆஜராகவில்லை.
வழக்கு விசாரணை தொடங்கிய உடன் தலைமை நீதிபதி முருகன், “சங்கரராமன் கொலை செய்யப்பட்ட 2004–ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.யாக இருந்த பிரேம்குமார் அரசால் புலன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டாரா? எப்போது ஓய்வு பெற்றார்? எப்போது இறந்தார்? போன்ற விவரங்களை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும்“ என்று அரசு வழக்கறிஞர் தேவதாசுக்கு உத்தரவிட்டார்.

எழுத்து பூர்வமாக...
அதுபோல் சங்கரராமன் மகன் ஆனந்த ஷர்மா, வழக்கு தொடர்பான வீடியோ, ஆடியோ தொடர்பான ஆதாரங்களை கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குற்றம் சாட்டப்பட்ட 6–வது குற்றவாளியான கதிரவன் சென்னை ஐகோர்ட்டில் தடை வாங்கியிருந்தார். தற்போது அவர் இறந்து விட்டதால் அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கு எந்த நிலையில் இருந்தாலும், சங்கரராமன் கொலை வழக்கில் தீர்ப்பு அளிக்க எந்த வித ஆட்சேபனை இல்லை என குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வக்கீல்கள் தெரிவித்தனர். இதனை எழுத்து பூர்வமாக மனுவாக கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
விசாரணை ஒத்திவைப்பு
தொடர்ந்து வழக்கு விசாரணை, வருகிற 17–ந் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

கருத்துகள் இல்லை: