செவ்வாய், 4 ஜூன், 2013

மதுரை அரசு மருத்துவமனையில் கத்தரிகோலை வயிற்றுக்குள் வைத்து தைத்த டாக்டர்ர்ரர்கள்

மதுரை கே.கே.நகரை சேர்ந்த ஆறுமுகம், இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். ஐகோர்ட் கிளையில் ஆறுமுகம் தாக்கல் செய்தார். அம்மனுவில்,' என் மனைவி இந்திராணி(62). வயிற்று வலிக்காக மதுரை அரசு மருத்துவமனையில் 1989ம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகும் வலி நிற்கவில்லை. பின்னர் தனியார் மருத்துவமனையில் செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில், இந்திராணி வயிற்றில் கத்திரிகோல் இருப்பதும், கத்திரிகோலை சுற்றி சதை வளர்ந்திருப்பதும் தெரியவந்தது. மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள், அறுவை சிகிச்சையின் போது கவனக்குறைவாக, அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்திய கத்திரிகோலை என் மனைவியின் வயிற்றுக்குள் வைத்து தைத்துள்ளனர். இதற்காக இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். மனைவிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் உள்ள கத்திரிகோலை அகற்ற அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார். ஆறுமுகத்தின் மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், 'உடனடியாக அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் உள்ள கத்திரிகோலை அகற்றுமாறு மதுரை அரசு மருத்துவமனை டீனுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் அரசு மருத்துவமனை டீனுக்கு பதில் மனு கோரி நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: