ராஜ்யசபா தேர்தலில் ஒரு எம்.பி. பதவி பெறுவதற்காக தே.மு.தி.க., தி.மு.க.
இடையே பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன என்று மீடியாக்களில் கதை பலமாக அடிபட்டுக் கொண்டிருக்க, தி.மு.க. வட்டாரங்களில் வேறு மாதிரியான கதை சொல்கிறார்கள்.
கோபாலபுரத்துக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர் ஒருவர், “விஜயகாந்த என்ன நினைக்கிறார் என்று எங்களுக்கு புரியலை. அவரை சுற்றி இருப்பவர்களுக்காவது, அவர் என்ன நினைக்கிறார் என்று தெரியுமா என்பது சந்தேகமாக இருக்கிறது” என்கிறார் சலிப்புடன்.
தென் மாவட்டத்தை சேர்ந்த இந்த முன்னாள் அமைச்சரின் கூற்றுப்படி, தி.மு.க. சார்பில் விஜயகாந்தை அப்ரோச் செய்தது நிஜம். கனிமொழிக்கு ஆதரவு தாருங்கள் என்று தி.மு.க. தரப்பில் நேரடியாகவே கேட்டார்களாம். நெல்லை தொழிலதிபர் ஒருவர்தான், தி.மு.க. சார்பில் கேப்டனை சந்தித்திருக்கிறார்.
அவர் திரும்பி வந்து, “கேப்டனின் பேச்சு பாசிட்டிவ்வாக இருந்தது. ஓரிரு நாட்களின் போன் பண்ணுகிறேன் என்று அனுப்பி வைத்தார்” என்று ரிப்போர்ட் செய்திருக்கிறார்.
இவர்கள் இரண்டு நாட்களென்ன, ஒரு வாரம் காத்திருந்தும் பதில் இல்லை. திமுக கனிமொழிக்காக எவ்வளவு தூரம் அலைகிறது என்பதை வேடிக்கை பார்கிறார். மறுபுறத்தில் தான் பதவிக்கு அலையவில்லை என்று வேஷம் போட இந்த மௌனம் பின்பு உதவும் என்று நினைக்கிறார், மொத்தத்தில் மீண்டும் திமுகவை உருட்டி விளையாடுகிறார்
அதே பிரமுகரை மீண்டும் அனுப்பலாம் என்று கலைஞர் சொன்னதை, ஸ்டாலின் ரசிக்கவில்லையாம்.“நாங்களாக மீண்டும் மீண்டும் போய் ஏன் சீப்பாக வேண்டும்” என்று கூறி, அந்த திட்டத்தை இல்லாது செய்துவிட்டாராம்.
இந்த தகவலை தெரிவித்த தி.மு.க. பிரமுகர், “விஜயகாந்த் தனது மச்சான் சுதீஷை எம்.பி.யாக்க தி.மு.க. ஆதரவு கேட்கிறார் என்று மீடியாவில் வந்த செய்தி பொய்” என்கிறார். “அப்படி கேட்டிருந்தாலாவது பரவாயில்லை. இது சரிப்படாது என்று வேறு திசையில் போய்க்கொண்டே இருந்திருக்கலாம். இவர் வாயே திறக்கிறார் இல்லை. ஒருவேளை என்ன செய்வது என்று அவருக்கே தெரியலையோ, என்னவோ” என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக