
The 25-year-old actress made her debut in 2007 opposite Amitabh Bachchan, and went on to act with stars including Aamir Khan and Akshay Kumar.
மும்பை: பாலிவுட் நடிகை ஜியா கான் தூக்கு போட்டு தற்கொலை செய்து
கொண்டார்.
பாலிவுட் படங்களில் நடித்து வந்தவர் ஜியா கான்(25). இங்கிலாந்தில் வளர்ந்த
அவர் அண்மையில் தான் தனது தாயுடன் மும்பை ஜுஹு பகுதியில் செட்டிலானார்.
கஜினி இந்தி ரீமேக்கில் நயன்தாராவின் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்
பெற்றவர். அவர் அண்மை காலமாக சொந்த பிரச்சனைகள் காரணமாக மன அழுத்தத்தில்
இருந்ததாக கூறப்படுகிறது.
படங்களில் நடிக்காமல் இருந்த அவர் தற்போது புதிய வாய்ப்புகளை தேடிக்
கொண்டிருந்தாராம். இந்நிலையில் அவர் நேற்று இரவு 11 மணிக்கு தனது வீட்டில்
தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத
பரிசோதனைக்காக கூப்பர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் சாகும் முன்பு கடிதம் எழுதி வைக்கவில்லை. அவர் அமிதாப் பச்சனுக்கு
ஜோடியாக நிஷப்த் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக