சனி, 27 ஏப்ரல், 2013

விடுதலை புலிகள் பயங்கரவாதிகள்!” அமெரிக்கா அறிவிப்பு!

“விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர
இலங்கைக்கு அமெரிக்கா அனைத்து வகையிலும் உதவியது” இவ்வாறு கூறியிருக்கிறார் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் மிச்சேல் சிஷன்.
இலங்கை இன்டர்நேஷனல் மீடியா அசோசியேஷன் கொழும்புவில் நடத்திய விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் தமிழ் மக்களை ரட்சிக்க அமெரிக்கா வந்துள்ளது என்று ஊரெல்லாம் பேச்சு எழுந்துள்ள நிலையில், விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்று தெரிவித்து அதிர வைத்துள்ளார், அமெரிக்க தூதர்.
அந்த விழாவில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையும் அமெரிக்காவும் ஒத்துழைப்புடன் செயற்பட ஆரம்பித்த வரலாறு 1800ம் ஆண்டு வரையான கால கட்டம் வரை முன்னோக்கி செல்கிறது. அந்த காலத்தில் அமெரிக்காவின் கொன்சல் ஜெனரல் காலி கோட்டை விடுதியின் வரவேற்பறையில் இருந்தாராம்.

அவர் அங்கிருந்து அமெரிக்காவின் கப்பல்களுக்கான ஆட்சேர்ப்பு பணிகளை மேற்கொண்டார் எனக் கூறப்படுகிறது.
எனினும் தற்போது நாம் 21-ம் நூற்றாண்டில் உள்ளோம். அப்போதைய காலத்தை விட அமெரிக்க தூதரகத்தின் பணிகள் அதிகரித்துள்ளன.

இலங்கையுடனான உறவுகள் அன்றைய காலத்தை விட மிகவும் ஆழமானதாக உள்ளது. இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கி வருகிறது. இலங்கை ஜனாதிபதியாக இருந்த ரணசிங்க பிரேமதாசவைக் கூட கொலை செய்த விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா அனைத்து வகையிலும் உதவியது.
அமெரிக்காவும் பயங்கரவாதத்தை எதிர்நோக்கியுள்ள நாடு என்ற வகையில், பயங்கரவாதம் காரணமாக நாட்டில், சமூகத்தில் ஏற்படக் கூடிய பாதிப்புகளை நன்கு அறிந்துள்ளது.
விடுதலைப் புலிகளை சர்வதேச ரீதியாக தடைசெய்யும் திட்டத்தில் அதிகளவான பங்கு அமெரிக்காவே வகித்தது. வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்ட காரணத்தாலேயே, புலிகளின் சர்வதேச நெட்வெர்க்கை உடைத்து, அந்த பயங்கரவாதிகளை தோற்கடிக்க முடிந்தது.
விடுதலைப்புலிகள் இயக்கம் இன்னமும் அமெரிக்காவில் பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்ட அமைப்பாக உள்ளது.
பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக தேசிய பாதுகாப்பை முன்னெடுத்துச் செல்லும் சவாலை நாம் அறிந்துள்ளோம்” என்று பேசினார்.
அமெரிக்க தூதரின் இந்தப் பேச்சு, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. அமெரிக்காவின் சாயம் வெளுத்துள்ளது என்று விரைவில் அறிவிக்கவுள்ள அவர்கள், அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என்று தெரியவருகிறது.
மவனே.. இனித்தான் இருக்கிறது அமெரிக்காவுக்கு செம அடி! மற்றொரு வியட்நாம்!! மறக்க முடியாத பாடம்!!!
யாரங்கே… ஒலிக்கட்டும் முரசு.. புறப்படட்டும் படையணிகள் சென்னை அமெரிக்க தூதரகத்தை நோக்கி!
viruvirupu.com

கருத்துகள் இல்லை: