வியாழன், 25 ஏப்ரல், 2013

பச்சையாகவே சொல்கிறேன் விஜயகாந்த் கட்சியை ஒழிப்பதற்கு ,,,,

அதிமுக அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் செய்யும் தவறுகளை ஜெயலலிதா கண்டுகொள்வதில்லை என்று திமுக தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார். காவல்துறையை கையில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகளை அழிக்க நினைப்பதாகவும் அதிமுக அரசின் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
தென்சென்னை மாவட்ட திமுக சார்பில் திருவான்மியூரில் தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் கண்டன பொதுக்கூட்டம் 24.04.2013 புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதில் பேசிய திமுக தலைவர் பேசுகையில், 1957ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் போட்டியிட்டது முதல் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றி வருவதை குறிப்பிட்டார்.
இந்த ஆட்சியில் தங்களது கட்சிக்காரர்கள் என்றால் அவர்களுக்கு ஓரு நீதி. எதிர்க்கட்சிகள் திமுகவானாலும், தேமுதிகவானாலும் அவர்களுக்ளு ஒரு நீதி. குறிப்பாக திமுகவையும், வேறு சில எதிர்க்கட்சிகளை அடக்குவதற்கு நான் இங்கு பச்சையாகவே சொல்லுகின்றேன், தம்பி விஜயகாந்த்துடைய கட்சியை ஒழிப்பதற்கு நடைபெறுகின்ற முயற்சிகளையெல்லாம் அறிவீர்கள்.
காவல்துறையை கையில் வைத்துக்கொண்டு என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று அதிமுக அரசு செயல்படுகிறது. தவறு செய்பவர்கள் மீது தமது அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறும் ஜெயலலிதாவிற்கு திருச்சியைச் சேர்ந்த டாக்டர் ராணி, அதிமுக எம்எல்ஏ (பரஞ்சோதி) மீது கொடுக்கும் புகார் மட்டும் ஏன் கண்ணுக்கு தெரியவில்லை.
நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த அந்த ராணி, அங்கிருந்த செய்தியாளர்களிடம், இந்த வழக்கில் 538 நாட்களாகியும் போலீசார் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. தன்னையும் தன் குழந்தையையும் சாவு நெருங்கி கொண்டிருக்கிறது. தங்களுக்கு ஆபத்து ஏற்பட்பட்டால் அதற்கு அதிமுக எம்எல்ஏதான் காரணம் என்று தெரிவித்தார். இந்த செய்தி கடந்த இரண்டு ஆண்டு காலமாக செய்திதாள்களில் வந்து கொண்டிருக்கிறது. இது முதல் அமைச்சருக்கு என்ன காரணத்தினாலோ தெரியவில்லை. ஏறத்தாழ இரண்டு மணி நேரம் சொன்ன போலீஸ் மானியத்திற்கான பதிலில் இந்த செய்தி இடம்பெறவில்லை. இடம்பெற்றிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பது அவருக்கு தெரியும். ஆகையால் அந்த செய்தியை மறைத்துவிட்டார். தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளும் ஜெயலலிதாவுக்கு இந்த ராணி படும் பாடு ஏன் தெரியாமல் போய்விட்டது.
ஆள் கடத்தல் செய்து நில அபகரிப்பில் சம்மந்தப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி போன்றோரை இந்த அரசு பாதுகாப்பு ஏன். திமுகவை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை கைது செய்து அலைகழித்து அவர் மரணம் அடைய காரணமாக அதிமுக அரசு செயல்பட்டது.
இவ்வாறு பேசினார்.

கருத்துகள் இல்லை: