திங்கள், 22 ஏப்ரல், 2013

மக்கள் வரிப்பணத்தில் அம்பானிகளுக்கு z பிரிவு பாதுகாப்பு

புதுடெல்லி: தீவிரவாத அச்சுறுத்தலை அடுத்து, ரிலையன்ஸ் நிறுவன
தலைவர் முகேஷ் அம்பானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் அலுவலகத்துக்கு, இந்தியன் முஜாகிதீன் அமைப்பிடம் இருந்து சமீபத்தில் மிரட்டல் கடிதங்கள் வந்தன. இது குறித்து மும்பை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தெற்கு மும்பை அல்டா மவுன்ட் ரோட்டில் உள்ள முகேஷ் அம்பானியின் நவீன அடுக்கு மாடி மாளிகைக்கு(அன்டிலியா) உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதால் முகேஷ் அம்பானிக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய பாதுகாப்பு ஏஜன்சி, உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தது. இதை பரிசீலித்த உள்துறை அமைச்சகம், முகேஷ் அம்பானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.உத்தரப் பிரதேசத்தில் உள்ள மத்திய ஆயுதப்படை(சிஆர்பிஎப்) பட்டாலியனிலிருந்து 28 போலீசார் கொண்ட குழுவினர், முகேஷ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அவர் மும்பை மற்றும் நாட்டின் இதர பகுதிகளுக்கு செல்லும் போது மத்திய ஆயதப்படை கமாண்டோக்கள் பாதுகாப்பு வழங்குவர். இசட் பிரிவு பாதுகாப்பின் கீழ் முகேஷ் அம்பானி செல்லும் வாகனத்துக்கு முன்பு பைலட் வாகனமும், பின்னால் நவீன ஆயுதங்கள் ஏந்திய கமாண்டோக்களின் வாகனமும் செல்லும்.
தொழிலதிபர் ஒருவருக்கு மத்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு வழங்குவது இதுவே முதல் முறை.

கருத்துகள் இல்லை: