Aamir has started a movement that will help change the world in which Indians live.
அமெரிக்கா டைம் இதழ் தேர்வு செய்துள்ள 2013 ம் ஆண்டின் நூறு பிரபலங்கள் பட்டியலில் இந்தியாவின் நிதியமைச்சர் ப.சிதம்பரம், பாலிவுட் நடிகர் அமீர்கான் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா, பாகிஸ்தான் சிறுமி மலாலா ஆகியோரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. டைம் வெளியிட்டுள்ள பட்டியலில் அதிபர் ஒபாமாவிற்கு 8 வது இடமும், அவரது மனைவி மிஷெல் ஒபாமாவும் இந்த முறை இடம் பெற்றுள்ளார்.< பாகிஸ்தானின் மலாலா பெண்களின் கல்விக்காக போரடி தாலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு உயிர் பிழை த்த மலாலாவின் பெயரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
ஜெனிபர் லாரன்ஸ் அமெரிக்காவின் புகழ்பெற்ற ராப் பாடகர் ஜெய் ஜீ துயல-ணு, ஆஸ்கார் விருது வென்ற ஜெனிபர் லாரன்ஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உரிமையாளர் இலான் முஸ்க் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ஒபாமாவின் மனைவி அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு எட்டாவது இடம் இடம் கொடுத்த டைம் பத்திரிகை அவருடைய மனைவி மிச்சேல் ஒபாமாவையும் இந்த லிஸ்ட்டில் இணைத்துள்ளது.
போப் ஆண்டவரும் லிஸ்டில் போப்பாண்டவர், பிரிட்டிஷ் இளவரசி கேத் மிடில்டன்,
ஆகியோரும் முக்கிய நபர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள பிரபலங்கள் ஆவர்.
ப.சிதம்பரத்தின் சாதனை பொதுவாக இந்திய அரசியல்வாதிகள் என்றால் ஊழல்வாதிகள்
என்ற கண்ணோட்டம் மட்டுமே நிலவுகிறது. ஆனால் 67 வயதான ப.சிதம்பரம் தனது
அலுவலகத்தில் நேர மேலாண்மையை திறம் பட அறிமுகப்படுத்தியுள்ளார் என்று டைம்
இதழ் புகழ்ந்துள்ளது. இதற்காகவே 100 பேர் பட்டியலில் ப.சிதம்பரம் இடம்
பெற்றுள்ளார்.
அமீர்கானுக்கு சிறப்பு தொலைக்காட்சியில் அமீர்கான் தொகுத்து வழங்கிய
சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சிதான் அவரது பல்வேறு புகழுக்கும் காரணமாக
அமைந்துள்ளது. இதுவே நூறு பிரபலங்கள் பட்டியலில் இடம் பெற வைத்துள்ளது. நல்ல சமூக
அக்கறையுள்ள படங்களை கொடுப்பதில் அமீர்கானுக்கு இணையாக இந்தியாவில் யாரும்
இல்லை என்றும் அவருடை தொலைக்காட்சி நிகழ்ச்சியான ாசத்யமேவ ஜெயதோ மக்களிடம்
மிகுந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக