

தவறை சுட்டிக் காட்டினால் திருத்துவதற்கு ஆள் இல்லை. இன்று, ஆளும் கட்சிக்கு ஒரு நீதி; எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி. காவல் துறையை கையில் வைத்துக் கொண்டு எதுவும் செய்து விடலாம் என்று நினைக்கின்றனர்.குறிப்பாக, தி.மு.க.,வையும், விஜயகாந்த் கட்சியையும் ஒழிக்க, முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி, தன்னை இரண்டாவது திருமணம் செய்து, 60 சவரன் நகைகளை பறித்ததாக, டாக்டர் ராணி, கடந்த 2011ல் வழக்கு தொடுத்தார். 538 நாட்கள் ஆகியும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை; தங்கள் உயிருக்கு ஆபத்து என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வழக்கு, முதல்வர் ஜெயலலிதாவிற்கு தெரியவில்லை. போலீஸ் மானிய பதிலில், இந்த செய்தி இடம் பெறவில்லை.இன்னொரு வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் ஆகியோர், தன்னை கடத்திச் சென்று மிரட்டி சொத்துகளை எழுதி வாங்கியதாக, கோகுல் என்பவர், கரூர் போலீசில், 2011ல் புகார் செய்துள்ளார். தற்போது, அந்த கோகுல் எங்கு சென்றார்; உயிருடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை.ஆனால், தான் பற்றற்ற தலைவி, நேர்மையானவர் என்று கூறும் முதல்வர் ஜெயலலிதாவின் கண்களுக்கு, ராணி, கோகுல் படும்பாடு தெரியவில்லையா? இந்த குற்றச்சாட்டுகளுக்கு அவர் ஏன் இன்னும் பதில் அளிக்கவில்லை. திருச்சி ராமஜெயம் கொலை செய்யப்பட்டு ஓராண்டு ஆகியும் குற்றவாளிகள் பிடிக்கப்படவில்லை. வீரபாண்டி ஆறுமுகம் சிறையில் கொலை செய்யப்படவில்லையா? இதற்கெல்லாம் இந்த ஆட்சி பதில் கூறித் தான் ஆக வேண்டும். இவ்வாறு தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.கூட்டத்தில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், பொதுச் செயலர் அன்பழகன், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
"தான் நேர்மையானவர் என்று பறைசாற்றும் ஜெயலலிதாவிற்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி, பரஞ்சோதி எம்.எல்.ஏ., ஆகியோர் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் கண்ணுக்கு தெரியவில்லையா?'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பினார். திருவான்மியூரில், தி.மு.க., சார்பில், "தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு' என்ற தலைப்பிலான கண்டன கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது:
முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி, தன்னை இரண்டாவது திருமணம் செய்து, 60 சவரன் நகைகளை பறித்ததாக, டாக்டர் ராணி, கடந்த 2011ல் வழக்கு தொடுத்தார். 538 நாட்கள் ஆகியும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை; தங்கள் உயிருக்கு ஆபத்து என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வழக்கு, முதல்வர் ஜெயலலிதாவிற்கு தெரியவில்லை. போலீஸ் மானிய பதிலில், இந்த செய்தி இடம் பெறவில்லை.இன்னொரு வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் ஆகியோர், தன்னை கடத்திச் சென்று மிரட்டி சொத்துகளை எழுதி வாங்கியதாக, கோகுல் என்பவர், கரூர் போலீசில், 2011ல் புகார் செய்துள்ளார். தற்போது, அந்த கோகுல் எங்கு சென்றார்; உயிருடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை.ஆனால், தான் பற்றற்ற தலைவி, நேர்மையானவர் என்று கூறும் முதல்வர் ஜெயலலிதாவின் கண்களுக்கு, ராணி, கோகுல் படும்பாடு தெரியவில்லையா? இந்த குற்றச்சாட்டுகளுக்கு அவர் ஏன் இன்னும் பதில் அளிக்கவில்லை.
திருச்சி ராமஜெயம் கொலை செய்யப்பட்டு ஓராண்டு ஆகியும் குற்றவாளிகள் பிடிக்கப்படவில்லை. வீரபாண்டி ஆறுமுகம் சிறையில் கொலை செய்யப்படவில்லையா? இதற்கெல்லாம் இந்த ஆட்சி பதில் கூறித் தான் ஆக வேண்டும். இவ்வாறு தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.கூட்டத்தில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், பொதுச் செயலர் அன்பழகன், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக