புதன், 24 ஏப்ரல், 2013

யஸ்வந்த் சின்ஹா : கூட்டுகுழுமுன்பாக பிரதமர் ஆஜாராக வேண்டும்

 புதுடல்லி: 2ஜி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பு பிரதமர் மன்மோகன் சிங் ஆஜராக வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான யஷ்வந்த சின்ஹா வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள 3வது கடிதத்தில், அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து நடைபெற்ற ஆலோசனைகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பு பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த பிரதமர் விவகாரத்தில் பிரதமர் தொடர்ந்து மவுனம் காப்பது அவர் மீதான புகார்களை ஒப்பு கொள்வதற்கு இணையானது என்றும் அவர் கூறியுள்ளார்.
அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக குறித்து விசாரித்து வரும் நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பு பிரதமர் ஆஜராக வேண்டும் என்று யஷ்வந்த சின்ஹா ஏற்கனவே 2 முறை கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அவரது கோரிக்கையை பிரதமர் நிராகரித்து விட்டார். இதனையடுத்து 3வது முறையாக நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பு பிரதமர் மன்மோகன் சிங் ஆஜராக வேண்டும் என அவர் கடிதம் எழுதியுள்ளார். நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள கூட்டுக் குழு அறிக்கையை வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்க எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில் இந்த கடிதம் அனுப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. dinakaran.com

கருத்துகள் இல்லை: