சனி, 9 ஜூலை, 2011

கே.பி. தொடர்ந்தும் கைதியாகவே உள்ளார்-தினேஷ் குணவர்தன!

கே. பி. குறித்து தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதோடு அவர் குறித்த அறிக்கை கிடைத்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளும் தரப்பு பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

குமரன் பத்மநாதன் வெளியில் சுதந்திரமாக இல்லை. அவர் கைதியாகவே உள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார். வாய் மூல விடைக்காக ரவி கருணாநாயக்க எழுப் பியிருந்த கேள்விக்குப் பதி லளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:- கே. பி. கைது செய்யப்பட்டு பல்வேறு விசாரணைகளுக்குட் படுத்தப்பட்டு வருகிறார். இது குறித்துப் பல தடவை பாராளுமன்றத்தில் அறிவித் துள்ளேன் என்றார். கே. பி. வெளியில் இருக்கையில் யுத்தத்துக்கு தலைமை தாங்கிய சரத் பொன்சேகா சிறையில் இருப்பதாக ரவி கருணாநாயக்க எம். பி. குறுக்கிட்டு கேள்வியொன்றை எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க பல தலைவர்கள் தலைமை வகித்தனர். மேலும் பலர் போரில் ஈடுபட்டனர். ஆனால் புலிகளை முற்றாக ஒழிப்பதற்கு வேறு யாரும் தலைமை வகிக்கவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே புலிகளை முற்றாக ஒழிக்க தலைமை வகித்தார். சரத் பொன்சேகா குறித்து வழக்கு விசாரணை நடக்கிறது. இந்த நிலையில் அவர் குறித்து யாருக்கும் இறுதி முடிவுக்கு வரவோ பாராளுமன்றத்தில் பேசவே முடியாது

கருத்துகள் இல்லை: