புதன், 6 ஜூலை, 2011

ஆப்கானிஸ்தானில் இரு பெண் எம்.பிக்கள் இடையே கடும் சண்டை youtube



காபூல்: ஆப்கானிஸ்தானில் இரு பெண் எம்.பிக்கள் இடையே கடும் சண்டை மூண்டது. சரமாரியாக குத்திக் கொண்ட இருவரும் தண்ணீர் பாட்டில்களையும் சரமாரியாக எரிந்து தாக்கிக் கொண்டனர்.

முன்னாள் ராணுவ ஜெனரல் நஸீபா ஜாகி. இவர் தற்போது எம்.பியாக உள்ளார். அதேபோல இன்னொரு பெண் எம்.பி. ஹமீதா அகமத்சாய். இவர்கள் இருவருக்கும் இடையே நேற்று நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் மூண்டது. இந்த வாக்குவாதம் அப்படியே சண்டையாக மாறியது. இருவரும் கடுமையாக சண்டை போட்டுக் கொண்டனர். பின்னர் தண்ணீர் பாட்டில்களை எரிந்து தாக்கிக் கொண்டனர்.

அப்போது அகமத்சாய், நஸீபாவின் கழுத்தைப் பிடித்து இழுக்க முயன்றார். பின்னர் முகத்திலும் சரமாரியாக குத்தினார். இருவரையும் விலக்கி விட முடியாமல் ஆண் எம்.பிக்கள் தவித்தனர். ஆனால் அப்படியே விட்டால் நிலைமை மோசமாகி விடும் என்பதால் ஆண் எம்.பிக்கள் குறுக்கிட்டு இருவரையும் விலக்கி விட்டனர்.

இந்த சண்டை நடந்தபோது இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் காபூல் வந்து அதிபர் ஹமீ்த் கர்சாயுடன் பேசிக் கொண்டிருந்தார் என்பதால் இந்த விவகாரத்தை அப்படியே அமைதியாக விட்டு விட்டனர்.

கருத்துகள் இல்லை: