செவ்வாய், 5 ஜூலை, 2011

பெண்களுக்கான வயதெல்லை அதிகரிப்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு

எதிர்வரும் மூன்று வருடங்களுள் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லும் பெண்களின் ஆகக்குறைந்த வயதினை 22ல் இருந்து 30 ஆகவும், ஆகக்கூடிய வயதினை 50ல் இருந்து 41 ஆக குறைக்கவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி சேவைகள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், 2005 தொடக்கம் 2010 வேலைக்கு என சென்று வேலையிழந்து 6873 பேர் நாடு திரும்பியுள்ளதாகவும், அதே காலப்பகுதியில் 975 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 2010ம் ஆண்டில் தற்கொலை, விபத்து மற்றும் இயற்கை போன்ற காரணங்களால் 330 பேர் மரணித்ததாகவும், 2009ல் 333 பேர் மரணித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதிகரிப்பு 

கருத்துகள் இல்லை: