திங்கள், 4 ஜூலை, 2011

தாய்லாந்து நாட்டின் முதல் பெண் பிரதமராக யிங்லக் ஷினாவித்ரா தெரிவு.

தாய்லாந்து நாட்டின் முதன் பெண் பிரதமராக பியூ தாய் கட்சியின் தலைவர் யிங்லக் ஷினாவித்ரா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.தாய்லாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் கட்சியான பிரதமர் அபிஜித் வெஜ்ஜாஜுவா தலைமையிலான ஜனநாயக கட்சி, யிங்லக் ஷினாவத்ரா தலைமையிலான பியூ தாய் கட்சி உள்ளிட்ட 42 கட்சிகள் போட்டியிட்டன. இதில் 90 சதவீதம் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், பியூ தாய் கட்சி 260 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதனால், அந்த கட்சியின் தலைவர் யிங்லக் ஷினாவத்ரா, தாய்லாந்தின் 28வது பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதன்மூலம், அந்த நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற அந்தஸ்தையும் பெற்றுக்கொள்கின்றார்

கருத்துகள் இல்லை: