சனி, 9 ஜூலை, 2011

சானல்-4 க்கு வீடியோ வழங்கிய தமிழர் கைது'

பி.பி.சி
இலங்கையில் போர்க் குற்றம் இடம்பெற்றதாக ஆவணப்படம் ஒன்றை வெளியிட்ட சானல்-4 தொலைக்காட்சிக்கு வீடியோ பிரதிகளை வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரிட்டனில் இருந்து இலங்கை சென்ற ஒரு தமிழர் இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நந்தவனம் ஜெகதீஸன் என்பவரே இவ்வாறு கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இலங்கை இராணுவத்தினருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையிலான போலியான வீடியோக்களை இவர் சானல-4 தொலைக்காட்சிக்கு வழங்கினார் என்றும், பிரிட்டனில் இருந்து இலங்கை வந்த இவரை கண்டியில் வைத்து கடந்த ஜூன் 30 ஆம் திகதி கைது செய்ததாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் செயலரின் உத்தரவின் பேரில் இவர் பற்றிய மேலதிக விபரங்கள் அடங்கிய ரகசிய அறிக்கை ஒன்றையும் பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, அவரை தடுத்து வைப்பதற்கான அனுமதியை கோரியிருந்தனர். அதனையடுத்து அவரை 90 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க கொழும்பு மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: