அசாதாரண சூழ்நிலை காரணமாக நிம்மதியான வாழ்க்கையைத் தேடி இலங்கையில் இருந்து அகதியாகச் சென்று இந்தியாவில் வசித்த தமிழ்பெண் ஒருவர் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நெல்லை பாரதியார் நகரை சேர்ந்தவர் மூர்த்தி என்பவரது மனைவியான 40 வயதுடைய தங்கம் என்ற பெண்ணே மர்ம நபர்களால் கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக