புதன், 6 ஜூலை, 2011

புதிய இ-டிக்கெட் சேவை: இதில் ஏஜன்டுகளுக்கு இடமில்லை.இந்தியன் ரயில்வே

தனிநபர்கள் மட்டுமே முன்பதிவு செய்யும் வகையில், புதிய இ-டிக்கெட் சேவையை இந்தியன் ரயில்வே விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. சேவைக்கட்டணமும் குறைகிறது.

ஐ.ஆர்.சி.டி.சி., மூலம் டிராவல் ஏஜன்டுகளும், வணிக நிறுவனங்களும் அதிகளவில் ரயில்வே டிக்கெட் இ-டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வந்தனர். இதனால், தனிநபர்களுக்கு டிக்கெட் எளிதில் கிடைக்காத நிலை ஏற்பட்டது. மேலும், டிராவல் ஏஜன்டுகள் பதிவு செய்யும் இ-டிக்கெட்டுகளை அதிக விலை வைத்து விற்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதை தவிர்க்கும் பொருட்டு, இந்தியன் ரயில்வே, புதிய இ-டிக்கெட் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, தனிநபர்கள் முதன்முறையாக, தாங்களாகவே பதிவு செய்து கொண்டு, இந்த சேவையை பெறலாம். இதற்கு கட்டணம் ஏதுமில்லை.

தொடக்கத்தில், ஒரு வாடிக்கையாளர் ஒரு மாதத்திற்கு எட்டு தடவைகள் மட்டும் பரிமாற்றங்கள் செய்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர். தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளுக்கு 5 ரூபாயும், இதர வகுப்புகளுக்கு 10 ரூபாயும் சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படும். ஐ.ஆர்.சி.டி.சி., யில் தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளுக்கு 10 ரூபாயும், இதர வகுப்புகளுக்கு, 20 ரூபாயும், சேவைக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பகல் 12.30 மணியிலிருந்து, இரவு 11.30 வரையில் இந்த சேவையை பயன்படுத்தலாம். இந்த சேவை தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

கருத்துகள் இல்லை: