வியாழன், 7 ஜூலை, 2011

police நடு ரோட்டில் கல்யாண ஊர்வலத்தை வழிமறித்து வசூல் வேட்டை

சென்னையில் கல்யாண ஊர்வலத்தின்போது ஊடே புகுந்து தடுத்து நிறுத்தி வசூல் வேட்டையாடிய சப் இன்ஸ்பெக்டர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்று பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவோர் குறித்த தகவல்களைத் தெரிவிப்பதற்காக தனி செல்போன் எண்ணையும் அவர் அறிவித்துள்ளார்.

சென்னை வேப்பேரி பகுதியில் ஒரு கல்யாணம் நடந்தது. இதற்காக மாப்பிள்ளை ஊர்வலம் நடந்தது. அந்த ஊர்வலத்தினர் போய்க் கொண்டிருந்தபோது அங்கு வந்தார் வேப்பேரி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் தர்மராஜ். ஊர்வலத்தை அனுமதியில்லாமல் எப்படி நடத்தலாம் என்று மிரட்டினார். இதனால் பயந்து போன கல்யாண வீட்டார் சப் இன்ஸ்பெக்டர் கேட்ட லஞ்சத்தைக் கொடுத்து திருமண ஊர்வலத்தை தொடர்ந்து நடத்தினர்.

இதுகுறித்து செய்தி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த சப் இன்ஸ்பெக்டரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய போலீஸ் கமிஷனர் ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டார்.

கல்யாண வீட்டில் புகுந்து வசூல் வேட்டையாடி சஸ்பெண்ட் ஆன சப் இன்ஸ்பெக்டரின் செயல் சென்னை காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை: