கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஒருவர் ஆயுதக் குழுவொன்றை வழி நடத்தி வருவதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளது என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் முன்னணி அரசியல்வாதியின் நெருங்கிய சகவான குறித்த மாகாணசபை உறுப்பினர் அந்த அரசியல்வாதியின் இணைப்புச் செயலாளராகவும் கடமையாற்றி வருகின்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள் பயன்படுத்திய மைக்ரோ ரக கைத்துப்பாக்கிகள் மற்றும் ரி56 ரக துப்பாக்கிகளை குறித்த உறுப்பினர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவரே இந்த ஆயுதக் குழுவிற்கு தலைமை தாங்குகின்றார்.
இந்த நபர் மட்டக்களப்பு ஆரயம்பதி பிரதேசத்தில் வசித்து வருவதாக சிங்களப் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
மாகாணசபை உறுப்பினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய குறித்த முன்னாள் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் ஆயுதக் குழுவை வழிநடத்துவதாகவும், இதற்கு கிழக்கு மாகாணத்தின் முக்கிய அரசியல்வாதி ஒருவர் பூரண ஆதரவு அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆயுதக் குழுவில் 40 பேர் அங்கம் வகிப்பதாகவும், அனைத்து உறுப்பினர்களும் ஆயுதங்களைப் பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் இந்தக் குழுவிற்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக