சனி, 28 மே, 2011

தமிழர்களின் ஏகப் பிரதிநிதியாக அரசாங்கம் எவரையும் ஏற்கவில்லை : லக்ஷ்மன் யாப்பா!


தமிழர்களின் ஏகப் பிரதிநிதியாக அரசாங்கம் எவரையும் ஏற்றுக்கொள்ளவில்லை என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் பிரச்சினைகைளத் தீர்த்து வைப்பதில் அரசாங்கம் முன்னுரிமை வழங்கி செயற்பட்டு வருகின்றது. புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் அறவிடப்பட்ட பெருந்தொகைப் பணம் தமிழ் மக்களின் நலனுக்காக செலவிடப்படவில்லை. அவை அழிவை ஏற்படுத்தும் யுத்த தளவாடங்கள் கொள்வனவுக்கே பயன்படுத்தப்பட்டன.
ஆனால் இன்று யுத்தம் முடிந்த நிலையில் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் நிதி அறவிடும் நடவடிக்கையினால் தமிழ் மக்கள் நன்மையடையப்போவதில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: