நடிகர் கமல்ஹாசன் மற்றும் சரிகா தம்பதிக்கு 2 மகள்கள். மூத்த மகள் ஸ்ருதி. படங்களில் நடித்து வருவதுடன், இசை அமைப்பாளராகவும் உள்ளார். இந்தியில் லக் என்ற படம் மூலம் அறிமுகமானார். தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக 7ம் அறிவு என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
இவரது தங்கை அக்ஷரா மும்பையில் அம்மா சரிகாவுடன் வசிக்கிறார். சொசைட்டி என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றுகிறார். நடன இயக்குனராவும் உள்ளார்.
இலங்கை வாலிபர் ஜேஸன் ஜெயசீலன்(20) என்பவருடன் அக்ஷரா கடந்த ஒரு வருடமாக நட்புடன் பழகி வருவதாக தெரிகிறது. இந்த நட்பு காதலாக மலர்ந்துள்ளது. இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது வெளிப்படையாக தெரிந்த ஒன்றுதான் என்றாலும் இருவரும் காதலிக்கிறார்கள் என்பது அவர்களது குடும்பத்துக்கே இப்போதுதான் தெரியவந்திருப்பதாக தகவல்கள் சொல்கின்றன.
இருவரும் வெளியில் ஜோடியாக செல்வதுடன், நெருக்கமாக இருப்பது போன்ற போட்டோவை இன்டர்நெட்டில் வெளியிட்டுள்ளனர். அடிக்கடி நெட்டிலும் சாட் செய்து கொள்ளும் இவர்கள் அக்ஷு மற்றும் ஜேய்ன் என்ற புனைப்பெயர்களில் காதல் சம்பாஷணைகளை பரிமாறிக் கொள்வதாக தெரிகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக