சனி, 27 நவம்பர், 2010

Kamala கலிபோர்னிய அரசு தலைமை வழக்கறிஞராக தமிழ்ப் பெண்

அமெரிக்காவின் கலிபோர்னிய மாகாண அரசு தலைமை வழக்கறிஞராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.கமலா ஹாரிஸின் தாய் ஷியாமளா கோபாலன் சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் மருத்துவர். இவர் அமெரிக்காவில் குடியேறி அங்கு வசிக்கும் ஆபிரிக்கர் ஒருவரை மணந்து கொண்டார்.

இந்தத் தம்பதிகளின் மகள் கமலா ஹாரிஸ் இப்போது கலிபோர்னியா மாகாண அரசு தலைமை வழக்கறிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் அந்த மாகாணத்தில் இப்பதவிக்கு வரும் முதல் பெண் என்ற பெருமையையும் முதல் வெள்ளையர் அல்லாதவர் என்ற பெருமையையும் கமலா பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் இந்து,கிறிஸ்தவ வழிபாட்டு முறைகள் இரண்டையுமே கடைபிடித்து வருகிறார். இரு மதப்பண்டிகைகளையும் கொண்டாடுவது அவரது வழக்கமாக உள்ளது.
கடந்த 3 வாரங்களாக அரசு தலைமை வழக்கறிஞர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில் கமலா போட்டியிட்டார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் ஸ்டீவ் கூலி போட்டியிட்டார். இதில் கமலா அமோக வெற்றி பெற்று அரசு தலைமை வழக்கறிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: