மின்னம்பலம் : பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய கூட்டணி அமைய ஸ்டாலின் முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் வைத்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆண்டுதோறும் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு அம்பேத்கர் சுடர் விருது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், பெரியார் ஒளி விருது வைகோவுக்கும், காமராஜர் கதிர் விருது நெல்லை கண்ணனுக்கும், அயோத்தி தாசர் ஆதவன் விருது குடியரசுக் கட்சி மூத்த தலைவர் கரியமால், காயிதே மில்லத் பிறை விருது இந்திய தேசிய லீக் தமிழ் மாநில தலைவர் பஷீர் அகமது, செம்மொழி ஞாயிறு விருது மொழியியலாளர் முனைவர் ராமசாமி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
சனி, 25 டிசம்பர், 2021
திருமாவளவன் : பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய கூட்டணி அமைய ஸ்டாலின் முன் முயற்சி எடுக்க வேண்டும்
இலங்கை திருக்கோவில் போலீஸ் நிலைய துப்பாக்கி சூடு 4 போலீசார் உயிரிழப்பு
![]() |
BBC - Tamil : இலங்கையின் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள போலீஸ் நிலையத்தில் நேற்று (24) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு போலீசார் உயிரிழந்தனர்.
குறித்த நிலையத்தில் பணியாற்றி வந்த – போலீஸ் உத்தியோகத்தர் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.
நேற்றிரவு 11.40 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக பிபிசி தமிழிடம், திருகோவில் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் போலீசார் மூவர் உயிரிழந்தனர். காயமுற்று வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களில் ஒரு போலீஸ் உத்தியோகத்தர் பின்னர் உயிரிழந்தார்.
மீண்டும் வேளாண் சட்டங்கள்..? மத்திய அமைச்சர் தோமர் பேச்சு ...
மாலைமலர் : பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தமான வேளாண் சட்டங்கள் சிலருக்குப் பிடிக்கவில்லை என நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
நாக்பூர்: மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் தொடர் போராட்டங்கள் காரணமாக திரும்ப பெறப்பட்டது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச தேர்தலைக் கருத்தில் கொண்டே மத்திய பாஜக அரசு இந்த முடிவை எடுத்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்நிலையில் வேளாண் சட்டங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம் என மத்திய வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் சூசகமாக தெரிவித்துள்ளார்.
கலைஞரை சண்முகநாதன் சொற்படிதான் ஸ்டாலினே சந்திப்பார் .. புரோட்டோகால் முக்கியம்.. கோபாலபுரத்து நினைவுகள்
![]() |
Umamaheshvaran Panneerselvam : கலைஞர் கருணாநிதியை சந்திக்க ஒருமுறை கோபாலபுரம் சென்றிருந்தோம்.அவர் உடல் நலிவுறத் தொடங்கியிருந்த நேரம் அது. ஆதலால் பார்க்க வருபவர்களை எல்லாம் சற்றே அதிகமாக காக்கவைத்து சோதித்து அவசியம் இருப்பின் மட்டுமே அனுமதித்து வந்தார்கள்.
கலைஞர் இல்லத்தின் வலதுப்புற இடம் எப்பொழுதும் ஒருவித நிதானம் தவழும் இடமாக இருக்கும். நிறைய பேர் காத்திருந்தாலும் உள்ளே சலசலப்பே எழவில்லை எனில் அங்கே சண்முகநாதன் இருக்கிறார் என்று புரிந்துகொள்ளலாம்.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழலில்ஹெலிகாப்டர் பேர ஊழலில் சோனியா காந்திக்கு தொடர்பு இல்லை- அமலாக்கப் பிரிவு. AgustaWestland ‘SG’ stands for Sushen Gupta, not Sonia Gandhi
Mathivanan Maran - Oneindia Tamil : டெல்லி: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழலில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு தொடர்பு இல்லை என அமலாக்கப் பிரிவு விளக்கம் அளித்திருக்கிறது.
2010-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது.
அப்போது ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட விவிஐபிகளுக்காக 12 அதிநவீன சொகுசு ஹெலிகாப்டர்களை இத்தாலியின் அகஸ்டா வெஸ்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது.
ரூ3,600 கோடி மதிப்பிலானது இந்த ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்துக்காக அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு ரூ400 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சர்ச்சை வெடித்தது.
நாட்டின் விமானப் படை தளபதியாக இருந்த தியாகி உள்ளிட்ட பலரது தலைகள் இந்த விவகாரத்தில் உருண்டன.
பின்னர் 2014-ல் மத்திய அரசு இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்திருந்தது!
link click not Sonia Gandhi
2016-ம் ஆண்டில் விவிஐபி ஹெலிகாப்டர் பேர ஊழலில் சோனியா காந்திக்கு தொடர்பிருப்பதாகவும் சர்ச்சை வெடித்தது. ஆனால் சோனியா காந்தி இதனை திட்டவட்டமாக மறுத்திருந்தார். மேலும் இது தொடர்பான விசாரணைகளை எதிர்கொள்ளவும் தாம் தயார் எனவும் சோனியா கூறியிருந்தார்.
மராட்டியத்தை விட அம்பேத்கர் புகழை பரப்பியது திராவிட இயக்கம்தான்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
Vignesh Selvara கலைஞர் செய்திகள் : "அம்பேத்கர் சுடர் விருதை பெரியார் திடலில் பெறுவதை விட வேறென்ன பெருமை கிடைத்துவிடப் போகிறது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
“மராட்டியத்தை விட அம்பேத்கரின் புகழை அதிகமாகத் தமிழ்நாட்டில் பரப்பியது திராவிட இயக்கம்தான்!” என அம்பேத்கர் சுடர் விருது பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை நிகழ்த்தினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு சான்றோருக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. முத்தமிழறிஞர் கலைஞர், ஆசிரியர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், கே.எஸ்.அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன் உள்ளிட்ட பலருக்கு இதுவரை வி.சி.க-விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
மாரிதாஸ் விடுதலை நீதிமன்றத்துக்கு ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
மின்னம்பலம்: மாரிதாஸ் மீதான வழக்குகளை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
யு ட்யூபர் மாரிதாஸ் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை மதுரை உயர் நீதிமன்றம் அடுத்தடுத்து ரத்து செய்தது. குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து பற்றி மாரிதாஸ் இட்ட ட்விட்டர் பதிவுக்கு எதிரான வழக்கையும், கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவலுக்கு தப்லிக் ஜமாத் மாநாடுதான் காரணம் என்று அவர் வெளியிட்ட வீடியோவுக்கு எதிரான வழக்கையும் அண்மையில் மதுரை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது.
வெள்ளி, 24 டிசம்பர், 2021
கொல்கத்தாவில் மம்தா பிரதமர் கோஷம் ஸ்பீடு ..போட்டியில் ராகுல் - ஸ்டாலின்- சரத் பவார்.......
![]() |
Mathivanan Maran - Oneindia Tamil : கொல்கத்தா: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மமதா பானர்ஜி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா தலைவர் பினய் தமங் அறிவித்துள்ளார்.
க்கா ஜன்முக்தி மோர்ச்சா தலைவர் பினய் தமாங், முன்னாள் எம்.எல்.ஏ. ரோஹித் சர்மா ஆகியோர் இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மோலாய் கடாக், பிரத்யா பாசு ஆகியோர் முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தனர்.
மோலாய் கடாக் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூர்க்காலாந்து தனி மாநிலம் கோரும் டார்ஜிலிங் அரசியலில் புதிய பயணம் எங்களுக்கு... இந்த தலைவர்கள் வருகையால் திரிணாமுல் காங்கிரஸ் வலிமை பெறும் என்றார். பிரத்யா பாசு கூறுகையில், பாஜக மக்களை மத ரீதியாக பிரித்து கொண்டிருக்கிறது. ஆனால் பாஜகவின் அரசியலை திரிணாமுல் காங்கிரஸ் தோற்கடித்தது. டார்ஜிலிங் மேம்பாட்டுக்காக மமதா பானர்ஜியை அந்த மக்கள் நம்புகின்றனர் என்றார்.
ஈஷா யோகா ஜாக்கியின் யானை வழித்தட ஆக்கிரமிப் பு- மீண்டும் ஆய்வு ! அமைச்சர் ராமச்சந்திரன் அதிரடி
Mathivanan Maran - Oneindia Tamil : s தஞ்சாவூர்: ஈசா யோகா மையத்தின் ஆக்கிரமிப்பு குறித்து மீண்டும் ஆய்வு நடத்தப்படும் என்று வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 டெல்டா மாவட்ட விவசாயிகள், எம்.எல்.ஏபங்கேற்ற ஆலோசனை கூட்டம் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற விவசாயிகள் ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள், விளைநிலங்களை பாழ்படுத்தும் கருவேல மரங்களை அழிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், கோவை ஈஷா யோகா மையம் ஒரு சென்ட் கூட ஆக்கிரமிக்கவில்லை என ஏற்கனவே அறிக்கை கொடுத்திருக்கிறது. வனத்துறையின் அருகில் உள்ள கட்டுப்பாடுகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
பரமக்குடி அரசு பள்ளியில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
மாலைமலர் : தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளுக்கே சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
அதன்படி சில நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பெருமாள் கோவில் மலை அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.
நடிகர் வடிவேலுக்கு கொரோனா.. ராமச்சந்திரா மருத்துவமனையில்
மாலைமலர் : உடல்நிலைக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நகைச்சுவை நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை சுராஜ் இயக்கி வருகிறார்.
இப்படப்பிடிப்பிற்காக நடிகர் வடிவேலு லண்டன் சென்றிருந்தார். இந்நிலையில் உடல்நிலைக்குறைவு காரணமாக லண்டனில் இருந்து திரும்பிய அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பழங்குடியினர் பாட்டு - இருளர் இன பாரம்பரிய இசை
Makkal Athikaram :; பழங்குடி மக்களின் மத்தியில் பல்வேறு மெட்டுகளில் பாடல் பரவிக்கிடக்கிறது. உழைக்கும் மக்களின் தாளகதியும், உண்டு கொழுக்கும் கூட்டத்தின் தாளகதியும் வேறுவேறு என்பதை நிரூபிக்கின்றது பழங்குடி மக்களின் இந்த பாடல்.
கான்கிரீட் கூட்டுக்குள் அமர்ந்துகொண்டு உழைக்கும் மக்களின் விடுதலைக்கான பாடலை தேடுவதைக் காட்டிலும் அலைந்து திரிந்து விடுதலைக்கான மெட்டை தேடுவதே மக்களுக்கான கலையாக இருக்கும்!
தேடுவோம்!
பகிர்வோம்!
விடுதலைக் குரலாய் ஒலிப்போம்!
"பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் பாடல்" ... சரவெடி சரண் மற்றும் டோனி ராக் ஆகிய இரு கானா பாடகர்கள்
கலைஞர் செய்திகள் : "பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் பாடல்" : கொதித்த திருவள்ளூர் எஸ்.பி - அதிரடி ஆக்ஷனில் போலிஸார்!
பள்ளிச் சிறுமிகள் குறித்து ஆபாசமாக பாடல் பாடிய நபர் குறித்து திருவள்ளூர் எஸ்.பி வருண்குமார் ட்விட்டரில் பதிவிட்ட நிலையில், அவர் மீது போலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பள்ளிச் சிறுமிகள் குறித்து ஆபாசமாக பாடல் பாடிய நபர் குறித்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி வருண்குமார் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நிலையில், அவர் மீது போலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கக்கன் அந்தக் காலத்து அன்னா அசாரே?
![]() |
Arul Ezhilan அந்தக் காலத்து அன்னா அசாரே!
பெரியாரும், அண்ணாவும், கலைஞரும், என்ன செய்தார்கள் என பக்கம் பக்கமாக எழுதலாம்.
கக்கன் என்ன செய்தார்?
“அவரு ரொம்ப எளிமையானவருங்க”
இதைத் தவிற இந்த முழு மூடர்களிடம் வேறு ஏதாவது கக்கனைப் பற்றி சொல்ல இருக்கிறதா? (சட்டியில் இருக்கணும் அல்லது சொல்கிறவன் மூளையில் இருக்கணும்) கக்கன் அந்தக் காலத்தில் வாந்த அன்னா அசாரே மோசமான அரசியல் தலைவர். நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாதவர். அவர் போலீஸ் மந்திரியாக இருந்த போதுதான் மொழிப்போர் தியாகிகள் கொல்லப்பட்டார்கள். தமிழகத்தின் அடிப்படையான சமூகக் கட்டமைப்பின் அஸ்திவாரம் இட ஒதுக்கீடு. அதில் முதன் முதலாக பொருளாதார அளவுகோலை நுழைத்து சிதைத்தவர் எமுஜியார் அந்த எம்ஜிஆரை ஆதரித்தவர் கக்கன்.
பொதுவாக அரசியலில் எதையும் சாதிக்காத மக்களுக்கு நல்லது செய்யாதவர்களைப் புகழ ஒரே ஒரு வரி போதும் “அவுரு ரொம்ப எளிமையானவருங்க”
நாம் தமிழர் ஹிம்லர் மீது தாக்குதல் நடத்துவதா?.. திமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
Rayar A - Oneindia Tamil சென்னை: தருமபுரி மாவட்டம், அரூரில் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் சில நாட்களுக்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மேடையில் பேசிக் கொண்டிருந்தனர்.
நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் என்பவர் திமுக அரசை மிக மோசமாக விமர்சித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும் திமுகவினரையும் தமிழக முதல்வரையும் ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த திமுகவினர் சிலர் திடீரென மேடையேறி பேச்சை நிறுத்தும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து திமுகவினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அங்கு போடப்பட்டு இருந்த நாற்காலிகளும், மேஜைகளும் வீசப்பட்டு அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.
மாரிதாஸ் மீது 2 ஆவது வழக்கு ரத்து: அதே நீதிபதி உத்தரவு!
மின்னம்பலம் : யு ட்யூபர் மாரிதாஸ் மீதான மற்றொரு வழக்கும் இன்று (டிசம்பர் 23) மதுரை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. மாரிதாஸ் பதிவு செய்த ட்விட்டர் பதிவு தொடர்பாக அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்த நீதிபதிதான் இந்த வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
மாரிதாஸ் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் இறந்தது தொடர்பாக பதிவு செய்த ட்விட்டர் பதிவு தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை ரத்து செய்யுமாறு மதுரை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இந்த வழக்கில் மாரிதாஸ் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றப் பிரிவுகள் பொருந்தாது என்று கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். இது வழக்கறிஞர்கள் மத்தியிலும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் கூட விவாதிக்கப்பட்டது.
வியாழன், 23 டிசம்பர், 2021
பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் கேரள பள்ளி சீருடை - இஸ்லாமிய குழுக்கள் போராடுவது ஏன்?
![]() |
![]() |
பி பி சி தமிழ் : கேரள அரசு பள்ளி ஒன்றில், பதின்ம வயது மாணவிகள் கால் சட்டைகள் அணிய அனுமதிக்கப்பட்ட பின், அது அம்மாநிலத்தில் சர்ச்சையானது. இந்த உடைகள் மீதுள்ள சர்ச்சை குறித்து டெல்லியில் உள்ள பிபிசியின் கீதா பாண்டேவும், கேரளாவில் அஷ்ரஃப் படன்னாவும் விளக்குகின்றனர்.
புதன்கிழமை காலை, ஸ்ரீங்கி சி.கே தனது புதிய சீருடையுடன் பள்ளி பேருந்திற்காக காத்துக்கொண்டிருக்கும் போது, முன் பின் அறிகம் இல்லாத பெண்ணிடமிருந்து வந்த பாராட்டு அவருக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது.
திருநங்கையாக மாறிய மகனை ஆட்களை வைத்து கொலை செய்த தாய்.. சேலத்தில்
![]() |
இந்நிலையில் கடந்த வாரம் வீட்டின் அருகே உள்ள ஒரு முட்புதரில் நவீன்குமார் காயங்களுடன் கிடந்துள்ளார் அவரை மீட்ட உமாதேவி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
இதில் சிகிச்சை பலனின்றி கடந்த இரு தினங்களுக்கு முன்பு நவீன் குமார் என்ற அக்ஷிதா உயிரிழந்தார். சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேக மரணம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
கட்டாய மதமாற்ற தடைச்சட்ட மசோதா கர்நாடகாவில் நிறைவேறியது
மாலைமலர் : கட்டாய மதமாற்ற தடைச் சட்ட மசோதா மீது சட்டசபையில் இன்று விவாதம் நடைபெற்றபோது மசோதாவை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது.
பெங்களூரு: கர்நாடகாவில் கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதா கடந்த இரு தினங்களுக்கு முன்பு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதா விவாதத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டிகே சிவக்குமார், சட்ட நகலை கிழித்து தரையில் வீசினார்.
பின்னர் காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தள்ளுவண்டியில் இறந்து கிடந்த சிறுவன்... போலீசில் சிக்கிய சிசிடிவி ஆதாரம்.. விழுப்புரத்தில்
மாலைமலர் : பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுவன் உணவு இல்லாமல் பட்டினியால் இறந்திருப்பது தெரியவந்தது.
விழுப்புரத்தில் சென்னை நெடுஞ்சாலையில் மேல் தெருவில் ஒரு ஷோரூம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தள்ளு வண்டியில் சுமார் 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் கடந்த 15-ந்தேதி காலை பிணமாக கிடந்தான். சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த சிறுவன் கொலை செய்யப்பட்டானா? என்பது குறித்து விசாரணையை போலீசார் முடுக்கினர். ஆனால் அந்த சிறுவன் யார்? எந்த ஊரை சேர்ந்தவன் என்ற விபரம் தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையில் உணவு இல்லாமல் பட்டினியால் அவன் இறந்திருப்பது தெரியவந்தத
மீண்டும் வரும் ‘மஞ்சள் பை! பிளாஸ்டிக் குப்பைக்கு டாட்டா
![]() |
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று இத்திட்டத்தைத் தொடங்கிவைக்கிறார்.
அடிப்படை வடிகால் கட்டமைப்பு இல்லாத இந்தியா போன்ற நாடுகளில் மழைக்காலங்களில் ஊர் முழுவதும் வெள்ளம் தேங்கிநிற்பதற்கு, பிளாஸ்டிக் குப்பைகளும் முதன்மையான காரணமாக இருக்கின்றன. பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள், பொட்டலங்கட்டும் காகிதங்கள் போன்றவையே இதில் அதிக அளவில் பாதகமாக இருக்கின்றன.
சீமான் கட்சியை (NTK) ஏன் தடைசெய்யவேண்டும்?
செல்லபுரம் வள்ளியம்மை : சீமானின் கட்சியை ,
ஜனநாயக கட்சிகளும் அரசுகளும் ஏன் இன்னும் தடை செய்யவில்லை?
இந்த கேள்வி பல வருடங்களாகவே எனக்குள் இருந்து வருகிறது
ஜனநாயக நாட்டில் அனுமதிக்கவே கூடாத பாசிச கருத்துக்கள் கோட்பாடுகளை கொண்டிருக்கிறது சீமான் கட்சி
அப்பாவி மக்கள் மத்தியில் குறிப்பாக சிறுவர்கள் மனதில் பாசிசத்தை விதைத்து வருகிறது
ஒரு படுமோசமான சர்வாதிகார அரசியலின் முகவுரையாகவே சீமானின் அரசியல் உள்ளது.
வெறுமனே உதறி தள்ளிவிடக்கூடிய உதிரிதானே என்று அமைதியாக கடந்து போவது நிச்சயம் ஒரு வரலாற்று தவறுதான் என்று தோன்றுகிறது
சீமான் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வருவார் ..
அல்லது ஆட்சிகளை அமைப்பதற்கு ஏதோவொரு வழியில் வெற்றிகளை பெறுவார் என்பதல்ல எனது கவலை.
வாக்கரசியலுக்கு அப்பாற்பட்டு அவர் விதைத்துவரும் நச்சு விதைகளின் தாக்கம் எதிர்காலத்தை ஒரு இருளுக்குள் தள்ளிவிடும் அளவுக்கு தீமையானதாகதான் தெரிகிறது
தீய சக்திகளுக்கு எண்ணிக்கை ஒரு பொருட்டே அல்ல
கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் வழங்கிய ஒரே பேட்டி .. சமஸ்
சமஸ் : சண்முகநாதனுக்கும் இப்போது 75 வயது ஆகிவிட்டது. உடலில் ஏகப்பட்ட கோளாறுகள். முதுமையின் விளைவாக கலைஞர் மௌனமாகி ஓராண்டு நெருங்கும் நிலையிலும், வழக்கம்போல அன்றாடம் கலைஞரின் வீட்டுக்கு வந்துவிடுகிறார் சண்முகநாதன்.
"தலைவர் சீக்கிரமே தேறிவிடுவார்; கூப்பிடுவார்" என்று கோபாலபுரம் வீட்டில் அவருக்கென உள்ள சின்ன அறையில் எந்த நேரமும் வேலைக்கான ஆயத்த நிலையில் கணினி முன் உட்கார்ந்திருக்கிறார். பத்திரிகையாளர்கள் சூழவே இருந்து வந்தாலும் இதுவரை சண்முகநாதன் தன் வேலையைத் தாண்டி யாரிடமும் பேசியதில்லை. தன் வாழ்வில் அவர் அளித்த முதல் பேட்டி இது.
புதன், 22 டிசம்பர், 2021
இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை நேரில் சந்தித்த தூதரக அதிகாரிகள் - விரைவில் விடுவிக்க நடவடிக்கை
தந்தி டிவி : இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மீனவர்கள் கைது குறித்து இலங்கை அரசிடம் இந்தியா தனது கவலையை தெரிவித்துள்ளதாகவும்,
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சிறையில் உள்ள மீனவர்களை சந்தித்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் மீனவர்கள் தங்கள் உறவினர்களுடன் தொலைபேசி வாயிலாக பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு மீனவரை தூதரக அதிகாரி நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரத்தில் இனி 4 நாட்கள் வேலை.. 3 நாட்கள் விடுமுறை- அடுத்த வருடமே புது சட்டம் அமலா? சம்பளம் குறையுமா?
Shyamsundar - Oneindia Tamil : இந்தியாவில் இனி அலுவலகங்களில் தொழிற்சாலைகளில் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற சட்டம் கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மீதம் உள்ள 3 நாட்கள் வார விடுமுறை அளிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
2021 தொடக்கத்திலேயே இது தொடர்பான செய்திகள் வெளியாகின.
வாரத்திற்கு வேலை நாட்களை நான்காக குறைக்கும் வகையில் தொழிலாளர் சட்டத்தில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வரப்போவதாக தகவல்கள் வந்தன.
ஆனால் இதில் மாநில அரசுகளின் கருத்தையும் கேட்க வேண்டும்.
தொழிலாளர் சட்டம் பொதுப்பட்டியல் என்பதால் மாநில அரசுகளும் இதற்கு ஏற்றபடி விதிகளை மாற்ற வேண்டும்.
அப்போதுதான் நாடு முழுக்க ஒரே மாதிரி தொழிலாளர் சட்டத்தை கொண்டு வர முடியும்.







